Feed on
Posts
Comments

Archive for the 'Uncategorized' Category

தேனீக்கள் பற்றிய அதிசயங்கள்! தேனீக்கள் பற்றி அருள் மறை குர்ஆன் கூறும் வியத்தகு செய்தி அறிவியலுக்கு ஒரு சவாலாக உள்ளது. இது குறித்து அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர். தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் பல அதிசயங்கள் குறித்து வெளியிடும் பல உண்மைகளைக் காண்போம். இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக [...]

ஸாபியீன்என்றால் யார்? இறைதூதர்கள் அனுப்பப்படாத போதும், அல்லது இறைதூதர்கள் வழிகாட்டு நெறி சென்றடையாத போதும், நல்லோர்களாக வாழும் சமுதாயமே ஸாபியீன்கள். இவ்வுலகிற்கு ஒரே ஒரு கடவுள தான் இருக்கமுடியும். மனிதனால் உருவாக்கப் பட்டவை கடவுளாக இருக்க முடியாது என்பதை இறைதூதர் மூலமாக இல்லாமல், இறைவன் வழங்கிய அறிவைக் கொண்டே இவர்கள் உணர்ந்து கொளவார்கள்.

வணக்க வழிபாடுகளிலே போலித்தனம்! நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். يوشك زمان علي أمتي . لا يبقي من الاسلآم الا اسمه ولا يبقي من القرآن الا رسمه  مساجدهم عامرة وهي خراب من الهدي என் சமுதயத்தவர் மீது ஒரு காலம் வரும். அப்போது அவர்களிடம் இஸ்லாமிய வாழ்க்கைமுறை எதுவும் இருக்காது. முஸ்லிம் என்ற பெயர் மட்டுமே எஞ்சியிருக்கும்.அழகிய வடிவில் குர்ஆன் வேதநூலாக கைகிலிருக்கும். ஆனால் குர்ஆனை பின்பற்றுவோர் அதன்வழி நடப்போர் எவருமிருக்கமாட்டார்கள். [...]

زيارة المسجد النبوي 1.மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? மதீனா முனவ்வராவுக்கு பயணம் செல்வோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை ஹஜ்ஜூ வணக்கங் களில் ஒன்றாகவே கருதுகின்றனர். மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? அல்லது அதன் ஸூன்னத்தான வணக்கங்;களைச் சார்ந்ததா? ஹஜ்ஜூக்காக வந்து மதீனாவுக்குச் செல்ல வில்லையெனில் ஹஜ்ஜூ நிறைவேறாதா? போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு எழலாம். கேட்கவும் செய்கின்றனர்.

ஹஜ் செய்பவர் 8ஆம் நாளில் மினாவிலே 8-வது நாள் லுஹர், அஸ்ரு, மக்ரிப்,இஷா, தொழுகைகளையும் 9-வது நாள் ஃபஜ்ருடைய தொழுகையையும்  (ஆக ஐவேளைத்  தொழுகைகளை) தொழவேண்டும். நான்கு ரக்அத் தொழுகைகளை கஸ்ராகத் தொழவேண்டும். ஒன்பதாவது நாளில் கலையில் அரபாத் சென்று லுஹ்ரு ஆஸ்ரு தொழுகைகளை கஸ்ராகத் தொழுவிட்டு சூரியன் மறைந்ததும் அங்கு மஃரிப் தொழாமலே முஸதலிபா சென்று மஃரிப்,இஷாவை கஸ்ரு ஜம்ஆக தொழுதுவிட்டு அங்கு இரவு தங்கவேண்டும்.பஜ்ரிக்குப்பிறகு நேராக மினா செல்லவேண்டும்.