அரபு மொழி உலகப் பெருமொழி இன்று உலகில் வளம் பெற்ற மொழிகளும் வளம் பெறாத மொழிகளும் எழுத்து வடிவம் பெற்ற மொழிகளும்,எழுத்து வடிவம் பெறாது பேச்சு வழக்கில் மட்டும் இருந்து வரும் மொழிகளுமாக இன்று சுமார் 6600 மொழிகள் வரை காணமுடிகிறது.அவற்றுள் தொன்மை யானதும், இலக்கிய இலக்கண வனப்பும் பெற்ற சிலமொழிகளில் அரபு மொழி முதன்மை யானது என்பதை உலகமே ஒப:புக் கொண்டுள்ளது. அதற்கு இறையருள் வேதமாம் அல் குர்ஆனே மிகப்பெரும் சான்றாகும்.
Posted in அரபு மொழி on March 9th, 2007 No Comments »
சொற் சிறப்பு: ஒரு மொழி வளமிக்கதாயின் அது சொல் வளம் பெற்றிருத்தல் வேண்டும். இப்பண்பால் இம்மொழி பிற மொழிக் கலப்பால் தூய்மை குன்றாமல் தனித்தியங்கும் ஆற்றல் பெற்று பொலிவோடு விளங்குகிறது. உயர்ந்த நாகரீகமும், சிறந்த பண்பாடும், கூரிய அறிவும் பெற்ற மக்களே அத்தகைய மொழியினைப் பெற்றிருக்க முடியும்.
Posted in அரபு மொழி on March 9th, 2007 No Comments »
இனிமைச் சிறப்பு: ’காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது போல் ஒவ்வொருவருக்கும் அவரவர் மொழி இனிமையாகவே இருக்கும். ‘ஸமஸ்கிருதம்’ என்றால் ‘நன்றாகச் செய்யப்பட்டது’என்பர் அம்மொழியினர். பாரசீகத்தை ‘ஷிரீன் ஸபான்’ (பாகு மொழி) என்பர். உருதுவை ‘உயிர்’ என்பர். இந்தியை ‘இதயம்’ என்பர். தெலுங்கைத் ‘தேன்’ என்பர். தமிழை ‘இனிமை’ என்பர்.
Posted in அரபு மொழி on March 9th, 2007 No Comments »
உள்ளத்தில் குமுழிடும் எண்ணத்தையும்இ பெருகிடும் உணர்ச்சியையும் பிறருக்குப் புலப்படுத்தத் தோன்றியதே மொழி. இவ்வாறு தோன்றிய மொழிகளுள் வளம் பெற்ற மொழிகளும் வளம் பெறா மொழிகளுமாக ஏறத்தாழ மூவாயிரம் மொழிகளை எண்ண முடிகிறது. இவற்றில் நிலஉலகில் முழுமதிபோல் ஒளிவீசுகிறது அகிலத்தைக் கவர்ந்த அரபு மொழி.
Posted in அரபு மொழி on March 9th, 2007 2 Comments »
அன்றாட வாழ்வில் அரபு மொழி மொழிகளுள் தொன்மையும், வன்மையும், இனிமையும், எளிமையும் வாய்ந்த உலக மொழிகளுள் அரபு மொழி முதன்மையானதாகும்.உலக மக்கள் தொகையில் கோடிக்கணக்கான மக்கள் அரபு மொழி பேசி வருகின்றனர்.இதனால் இம்மொழி, மொழிகளின் அரசனாகவும், அரசர்களின் மொழியாகவும் போற்றப்பட்டு வருகிறது.