Posted in தஃவா வகுப்பு, பொதுவானவை on September 6th, 2010 No Comments »
நற்செயல்களை விரைந்து செய்ய வேண்டும். நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிருத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான் காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான். ஒருவர் தொழாதவறாக இருப்பார் தொழாமல் இருப்பது [...]
மாஷா அல்லாஹ்! அல்லாஹ் நாடியதே நடக்கும் என்பதைக் குறிக்கவே “மாஷா அல்லாஹ்” எனக் கூறப்படும். (பார்க்க: 6 :128,7:188, 10:49,18:39,87:7)
நேரம் ஒதுக்குங்கள்! 1. வாழ்க்கையில் நல்லதை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள். இது வெற்றியின் இரகசியம்! 2. சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். இது ஆற்றலின் ஆணிவேர்! 3. படிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். இது மெய்யறிவின் அடித்தளம்!
ஒரு மனிதனின் சராசரி ஆயுள் ஒரு மனிதனின் சராசரி ஆயுளைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது கூறினார்கள். عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عُمُرُ أُمَّتِى مِنْ سِتِّينَ سَنَةً إِلَى سَبْعِينَ سَنَةً எனது சமுதாயத்தவரின் ஆயுள் காலம் அறுபதிலிருந்து எழுபது வரையாகும் ( அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ,நூல்: புகாரி-2501) இன்று நமது ஆயுளில் இறைவணக்கத்திற்கு நாம் [...]
( 15.04.2010 அன்று ஜித்தாவில் டாக்டர் அஹ்மத் பாக்கவி ஆற்றிய உரையிலிருந்து ) வீணாகும் காலங்கள் வீணாகும் காலங்கள் என எனக்குத் தலைப்பு தரப்பட்டுள்ளது. அப்படியானால் நமது பொன்னான நேரங்கள் மண்ணாகின்றன, வீணாகின்றன என்று தானே பொருள்படுகிறது. நேரத்தின் விலையை, மதிப்பை மாண்பை வெகுமதியை, அது நிகழ்த்தும் அதிசயத்தை மக்கள் புரிந்து கொள்ளாததால் தான் நேரத்தை வீண்விரயம் செய்கின்றனர். அதன் ஆழமான பொருளை, அது வலியுறுத்தும் உண்மையை, அதை இழப்பதால் ஏற்படும் பேரழிவை, அதனால் விளையும் ஆபத்துகளை மக்கள் [...]