Feed on
Posts
Comments

Archive for the 'கலைச் சொற்கள்' Category

(ந முதல் ஹ வரை. எழுத்தின் வரிசை :ந, வ,ள,ஜ,ஸ,ஷ,ஹ) நஃபில் نفل உபரியானது. உபரியான வணக்கங்களுக்கும் (தொழுகைகளுக்கும்) இச்சொல் பயன்படுத் தப்படுகிறது. வஸீலா (வாவு,ஸீன் எழுத்து) وسيلة உதவி தெடுதல் என்பது பொருளாகும். இறைவனிடம் தொழுகையின் மூலமாககவும் பொறுமையோடிருந்தும் உதவி தேடுங்கள்.  ( குர்ஆன்: 5:35) நபிமார்கள், அவ்லியாக்கள், இறந்து போன பெரியார்கள் மூலமாக வஸீலா என்ற பெயரில் வேண்டுவதற்கோ, உதவி தேடுவதற்கோ குர்ஆனிலோ, ஹதீஸிலோ எவ்வித ஆதார முமில்லை.

மு முதல் நு வரை முஸ்லிம் مسلم அல்லாஹ்விற்கும் அவனது மார்க்கத்திற்கு மட்டும் கட்டுப்பட்டவர். முஸ்ஹஃப் مصحف ஏடு. குர்ஆனுக்கு வழங்கப்படும் மற்றொரு பெயர். முஃமின் مؤمن அல்லாஹ்வையும் அவன் கூறிய அனைத்தையும் முழுமையாக நம்பிக்கை கொண்டவர். முஃபஸ்ஸிர் مفسر குர்ஆனையும்,ஹதீஸையும் கற்றுத்தேறி குர்னுக்கு விரிவுரை செய்வோர்.

(ச முதல் மீ வரை: அகர வரிசை: ச,சா,த,தா,தி,தீ,து,தூ, தை, ந,ப,பா,பி,பீ,பு,பூ,பை,ம,மா,மி,மீ,மு.மூ,மை) சாயிபா سائبة அரபுகள் நேர்ச்சைக்காக சில ஒட்டகங்களை தங்கள் தெய்வங்க ளுக்காக விட்டுவிடுவார்கள். அவற்றில் யாரும் ஏறிச் செல்வது கூடாது. என்றும் முடிவு செய்திருந்தனர். இத்தகையை ஒட்டகங்களை ‘சாயிபா’ (سائبة ) எனக்குறிப்பிடுவர். (பார்க்க : 5:103) தக்பீர் تكبير ‘அல்லாஹு அக்பர்’ அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறுவதற்கு “தக்பீர்” எனப்படும்.அதானிலும்,தொழுகையிலும், பெருநாட்களிலும் இந்த தக்பீர் முழக்கங்களை தொடர்ந்து நீங்கள் கேட்கலாம். தஃப்ஸீர் [...]

தொகுதி 2.   (உ முதல் கை வரை)                                                                 எழுத்து வரிசை: உ,ஊ,எ,ஏ,க,கா,கி,கீ,கு,கூ,கை) உம்ரா عمرة நாடுதல்,சந்தித்தல்,வழிபடுதல் என்பன பொருளாகும்.”லப்பைக்க உம்ரத்தன்” உம்ராவுக்காக நிய்யத் வைத்து கஅபாவை 7 தடவைகள் இடப்பக்கமாக (தவாஃப்) [...]

இஸ்லாமிய கலைக் களஞ்சியம் இஸ்லாமிய கலைக்களஞசியம் என்ற தலைப்பில்  35  ஆண்டு களுக்கு முன் 1967 முதல் 1975 வரை பல் வேறு இஸ்லாமியத் தலைப்புகளில் அறிஞர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்களுடன் துணை ஆசிரியராக இருந்து  எழுதி வந்தேன். அவை  1976,1977, 1979 ஆண்டுகளில் மூன்று பாகங்களாக வெளி வந்தது  இஸ்லாமிய வாசகர்களுக்கு நினைவி ருக்கும். அன்றைய சூழ்நிலையில் நமக்குக் கிடைத்த தகவல்களின் தொகுப்பாகவே அவை  அமைந்தன. ஆதார பூர்வமான தகவல்கள் கிடைப்பது அன்று கடினமாக இருந்தது. ஆதாரமற்ற [...]