Posted in தஃவா வகுப்பு, வரலாறு on May 27th, 2010 No Comments »
அஸ்ஹாபுஸ்ஸுஃப்ஃபா மஸ்ஜிதுந்நபவீயின் வடக்குப்பகுதியில் ஒரு திணணை இருந்தது.அதன் மீது ஈச்சந்தட்டியால் ஒரு பந்தல் போடப்பட்டி ருந்தது.அதில் ஏழை அகதிகள் தங்கி வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை 10,30,70,92,93,400 என்று பலவிதமாகக் கூறப்படுகிறது. அஸ்ஹாபுஸ்ஸுஃப்ஃபாவில் 70 பேர்களை ப் பார்த்ததாக ஆபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி) இவர்களல்லாத 70 பேர்கள் பீர் மவூனாவுக்குப் பிரச்சாரத்திற்காக அனுப்பப்பட்டார்கள். இவர்கள் பின்னர் அங்கே படு கொலை செய்யப்பட்டார்கள்.
Posted in தஃவா வகுப்பு, வரலாறு on February 17th, 2010 No Comments »
குருடர்கள் இயலாதவர்களுக்கு ஹிஜரத்திற்கு விதிவிலக்கு அளிக்கபட்டிருந்தும், ‘ஹிஜ்ரத்தின் மிகப் பெரிய பாக்கியத்தை இழந்துவிடக்கூடாது. அதை அடைந்தே தீரவேண்டும்’ என்ற வீரஉறுதியுடன் கண்தெரியாத அந்தகர்களும் வரிந்து கொண்டு நின்றார்கள்.
Posted in தஃவா வகுப்பு, வரலாறு on February 3rd, 2010 No Comments »
ஹிஜ்ரத் ஒரு மாபெரும் சகாப்தம் முஹர்ரம் மாதம் பிறந்ததும் இஸ்லாமிய புத்தாண்டின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு தியாகத்தின் நினைவே பளிச்சிடுகிறது. 1429ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற உயிர் தியாகங்கள் சுவடு பதித்த தடயங்கள், இரத்தம் சிந்திய நாட்கள், கொள்கைக்காக பிறந்த பொன்னாட்டை இழந்த நினைவுகள் அலை அலையாய் மனக்கண் முன் பளிச்சிடுகின்றன. இப்படியொரு வரலாற்றை உலகம் கண்டதில்லை. கேட்டதில்லை. வரலாறும் பதித்ததில்லை.
Posted in தஃவா வகுப்பு, வரலாறு on December 30th, 2009 No Comments »
“முஹர்ர்ரம்” இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம்.முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர்.முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள்.
زيارة المسجد النبوي 1.மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? மதீனா முனவ்வராவுக்கு பயணம் செல்வோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை ஹஜ்ஜூ வணக்கங் களில் ஒன்றாகவே கருதுகின்றனர். மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? அல்லது அதன் ஸூன்னத்தான வணக்கங்;களைச் சார்ந்ததா? ஹஜ்ஜூக்காக வந்து மதீனாவுக்குச் செல்ல வில்லையெனில் ஹஜ்ஜூ நிறைவேறாதா? போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு எழலாம். கேட்கவும் செய்கின்றனர்.