தேனி (النَّحْل) அருள்மறைக்குர்ஆனில் அல்லாஹ், ”தேனீக்களைச் சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி உள்ளது” எனக்கூறுகிறான். 16:68,69 وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ உம் இறைவன் தேனீக்கு உள்ளுணர்வை அளித்தான். ‘நீ மலைகளிலும் மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள். (என்றும்) 16:68.
குர்ஆனில் بَيْتُ الْعَنكَبُوتِ சிலந்தி வீடு குர்ஆனில் வரும் 29-வது அத்தியாயத்திற்கு சூரத்துல் அன்கபூத் என்று பெயராகும். அன்கபூத் என்றால் ”சிலந்திப்பூச்சி” என்று பொருள். இறைவன் குர்ஆனில் இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக 22:73,29:41; வசனங்களில் ஈயையும் சிலந்தியையும் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
‘ஹுத்ஹுத்’ (الْهُدْهُد) மரங் கொத்திப்பறவை மரங்கொத்திப் பறவை ஒரு அற்புதமான பறவை. நினைவாற்றல், பேச்சாற்றல்,உணவை சேகரித்தல், உளிபோன்ற கூரிய அலகுகள் உடையவை. இறைமறை கூறுகிறது:-
நபிசுலைமானிடம் பேசிய எறும்பு27:16-19(نملة سليمان) حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِي النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோது, ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது. (அல்குர்ஆன்:27:18)
நூஹ் நபியின் கப்பல்-1 அல்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது தான் என்பதற்கு மேலும் பல வரலாற்றுச் சான்றுகள் அதிலே மின்னிக்கொண்டிருக்கின்றன.அதை வான்மறை பின்வருமாறு கூறுகிறது :