Feed on
Posts
Comments

Archive for the 'கொள்கை' Category

பெரும்பாவங்கள் الكبائر பெரும்பாவங்கள் பாவங்கள் என்றால் என்ன? என்பதைப் புரியாமலே நம்மில் பலர் அதைச்செய்து குற்றவாளியாகின்றனர். எனவே பாவம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். பெருமானார் (ஸல்) அவர்களிடம் நன்மையைப்பற்றியும் தீமையைப்பற்றியும் வினவினேன். அதற்கவர்கள் “நல்லொழுக்கமே நன்மையெனப்படும்.பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்செரிப்பதும், அதைப்பிறரிடம் வெளியிடும் போது நீ வெறுப்பதுமாகும்.” என  விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸிற பின் ஸம்ஆன், நூல் முஸ்லிம்)

விஷம் கக்கும் வெப்சைட்டுகள் இஸ்லாத்திற்கெதிரான யூதர்களும் கிறித்தவர்களும் முஸ்லிம்களை திசைதிருப்பி அவர்களின் கொள்கைகளை உடைத்தெறிய பல உபாயங்களையும், யுக்திகளையும், தந்திரங்களையும் கையாண்டு வருகின்றனர்.

இணைவைத்தல் எங்கே எப்போது தோன்றியது? இறைக் கொள்கைக்கு எதிரான நிராகரித்தலும், இணைவைத்தலும் இறைதூதர் நூஹ்-நோவா- (அலை) அவர்களின் சமூகத்தாரிடமே முதலில் தோன்றியது.

இயற்கை மார்க்கம் இஸ்லாம் தான்! அல்லாஹ் கூறுகிறான்:- فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ  وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُون (நபியே!) உண்மை நெறியில் நின்று உமது முகத்தை இந்த (இயற்கை) மார்க்கத்தின் பால் (முற்றிலும்) நிலைப்படுத்துவீராக! இதுவே அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கமாகும்.இந்த நிலையிலே அல்லாஹ் மனிதர்களை படைத்துள்ள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றமும் இல்லை.இதுவே நேரான மார்க்கம். [...]

மனிதன் ஏகத்துவத்திலிருந்து தடம் புரண்ட வரலாறு அல்லாஹ் ஒருவன் தான்! மனிதன் ‘தன்னைப் படைத்தவன் அல்லாஹ் தான். அவன் ஒருவனே’ என்னும் ஏகத்துவ நெறியை இயல்பிலேயே பெற்றவனாகவும், அந்த அடிப்படையிலேயே படைக்கப்பட்டவனாகவும் உள்ளான். மனிதன் மட்டுமல்ல. உலகிலுள்ள அனைத்து படைப்புகளும் அவ்வாறு தான் படைக்கப்பட்டுள்ளன. அதை அனைத்தும் உணர்ந்தே உள்ளன. இதுவே இயற்கை நிலையாகும்.