Feed on
Posts
Comments

ஸாபியீன்என்றால் யார்?

இறைதூதர்கள் அனுப்பப்படாத போதும், அல்லது இறைதூதர்கள் வழிகாட்டு நெறி சென்றடையாத போதும், நல்லோர்களாக வாழும் சமுதாயமே ஸாபியீன்கள்.
இவ்வுலகிற்கு ஒரே ஒரு கடவுள தான் இருக்கமுடியும். மனிதனால் உருவாக்கப் பட்டவை கடவுளாக இருக்க முடியாது என்பதை இறைதூதர் மூலமாக இல்லாமல், இறைவன் வழங்கிய அறிவைக் கொண்டே இவர்கள் உணர்ந்து கொளவார்கள்.

மேலும் அறிவுபூர்வமாக சிந்திக்கும் போது எவையெல்லாம் தனிமனிதனுக்கோ சமுதாயத்துக்கோ கேடு அவற்றிலிருந்து விலகி வாழ்வார்கள்.நல்லவை என தெரிபவற்றைக் கடைபிடிப்பார்கள்.
வணக்கவழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைதூதர்கள் வழியாகத்தான் அறிய முடியும். இதைத்தவிர மற்ற விஷயங் களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே  ஸாபியீன்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படுமுன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனைமட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர்.நபி(ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைக் கூறிய போத அவர்களையும் ஸாபியீன்கள் என்று குறிப்பிட்டனர்.( பார்க்க புகாரி:344)
யாரேனும் நபிகள் நாயகத்தின் மார்க்கத்தில் சேர்ந்தால் அவர் ஸாபியீன்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டார் எனவும் கூறியுள்ளனர்.       ( பார்க்க புகாரி:3522)
இன்றைக்கும் இறைதூதர்கள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம்.அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும். இல்லையெனில் மறுமையில் அவர்கள் குற்றவாளிகளே! (பார்க்க குர்ஆன்: 2:62,5:69,22:17 வசனங்கள்)

Trackback URI | Comments RSS

Leave a Reply

You must be logged in to post a comment.