Feed on
Posts
Comments

இன்ஷா அல்லாஹ்!
இதன் பொருள் ” அல்லாஹ் நாடினால்” என்பதாகும். இதைச்சொல்வது குறித்து குர்ஆனில் 18:23,24. 2:70,12:99,18:69,28:27,37:102,48:27 ஆகிய ஏழு இடங்களில் வருகின்றன.

மக்கா குரைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்டு திணற வைத்தனர். அவர்களுடைய மார்க்கத்தை போலி மார்க்க மாக சதி சூழ்ந்து யத்ரிபிலுள்ள யூத ரப்பிகளிடம் ஆலோசனை கலந்து நபி(ஸல்)அவர்களை அணுகி குகைவாசிகள்பற்றி வினவினர்.

நபி (ஸல்) அவர்களோ ” இன்ஷா அல்லாஹ்” என்று கூறாது “நாளை இதற்கு பதில் கூறுகிறேன்” என்று மறுமொழி பகர்ந்தனர். இவ்வாறு அவர்கள் “இன்ஷா அல்லாஹ்” என்று கூறாதன் காரணமாக இறைவனி டமிருந்து அவர்களுக்கு இரண்டு வார காலமாக வஹீ வருவது நின்று விட்டது.

வாக்களித்தபடி நபி(ஸல்)அவர்கள் அடுத்தநாள் பதில்கூறாத தைக் கண்ட குறைஷகள் அவர்களை பொய்யெரென எங்கணும் இழித்து ரைக்கத் துவங்கினர்.

நபி(ஸல்) அவர்ளோ கண்ணீர் மல்க தம் பாவம் பொறுத்தருள மண்டாடினர். அப்பொழுது இறைவனிடமிருந்து

وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَداً ، إِلَّا أَن يَشَاءَ اللَّهُ وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَى أَن يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَذَا رَشَداً

” நிச்சயமாக நான் அதனை நாளைக்குச் செய்பவனாக இருக்கிறேன் என்று யாதொரு  வாக்குறுதியும் அளிக்க வேண்டாம் என்றும் அல்லாஹ் நாடுவதையல்லாது  இன்னும் நீர் எதையேனும் மறந்தீரா னால் உம் இரட்சகனை நினைவு கொள்வீராக! (18:23,24) என்றும் அருள் எச்சரிக்கை வந்தது. அத்துடன் குகைவாசிகள் பற்றிய சில விவரங்களையும் இறைவன் கூறினான்.

ஒருவர் ஒரு வாக்குறுதியை அது எத்துணை சிறியதாயினும், பெரிய தாயினும், அதனை அளிக்கு முன்  ” இன்ஷா அல்லாஹ்” என்று கூறின், அவர் அவ்வாக்குறுதியை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கடமைப் பட்டவராகிறார். மேலும் அல்லாஹ், அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றப் போது மானவன்.

எனவே ஒருவர் மற்றவருக்கு வாக்குதி வழங்குமுன் “இன்ஷா அல்லாஹ்” எனக்கூறி வாக்குறுதி அளித்தல் வேண்டும்.

உலகில் அனைத்துச் செயலகளும்,இயக்கங்களும், அல்லாஹ்வின் நாட்டப்படியே நிகழ்கின்றன.மனித வாழ்வின் அனைத்துப் போக்கு களும் இறைக் கட்டளைப்படியே நடந்தேறுகின்றன. எனவே இறைவன் நாடினால் மட்டுமே எதுவும் நிகழ்வுற முடியும்

இந்த உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதே ” இன்ஷா அல்லாஹ்” என்ற தொடர்.

ஒருவர் மற்றவருக்கு வாக்குறுதி தருமுன் இறைவனை முன்னிறுத்தி “இன்ஷா அல்லாஹ்” எனக் குறிப்பிடுவதால் மனிதனின் பொறுப்பை விட இறைவனின் பொறுப்பே  அதிகமாகிறது. அந்த நம்பிக்கையில் கூறுவதால் அவனே அதை நிறவேற்றிவைப்பதற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

இறையருளின் துணையோடு தனது வாக்குறுதியை முனைந்து நிறைவேண்டிய பொறுப்பும் கடமையும் மனிதனுக்கு ஏற்பட்டு விடுகிறது. இதனால் இன்ஷா அல்லாஹ் எனக்கூறுவதன் மூலம்  ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பேற் படுகிறது.

Trackback URI | Comments RSS

Leave a Reply

You must be logged in to post a comment.