Feed on
Posts
Comments

மாஷா அல்லாஹ்!

அல்லாஹ் நாடியதே நடக்கும் என்பதைக் குறிக்கவே “மாஷா அல்லாஹ்” எனக் கூறப்படும். (பார்க்க: 6 :128,7:188, 10:49,18:39,87:7)

மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கேள்வியுறும்போதோ,வியப்புக்குரிய ஒன்றை செவியுறும்போதோ,ஒருவரின் திறமையை அல்லது சாதனையைப் பாராட்டும் போதோ   “மாஷா அல்லாஹ் “என்றோ,            ” மாஷா அல்லர்லாஹ் லா குவ்வத்த இல்லா பில்லாஹ் “  என்றோ கூறப்படும்.

அல்லாஹ் வழங்கிய அருத்கொடைகளை நினவுகூரும் போதும், வியப்புக்குரிய ஒன்றை சொல்லும்போதும் ஒருவரைப் பாராட்டும் போதும் இச்சொலிலை அரபுகள் அதிகமாகப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

அல்லாஹ் நாடியது நிகழந்தது.எனவே அதற்குரிய நன்றியையும் ,புகழ் மொழயையும் அல்லாஹ்வுக்கே தெரிவிக்கவேண்டும்.அந்த பெருமை யும் நன்றியும் அவனுக்கே உரியது.அது நம் கையில் இல்லை என்று   நமது நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான நம்பிக்கை சார்ந்த சொற்றொடரே  “மாஷா அல்லாஹ்” என்பதாகும்.

இறை தூதர் நபி மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம் ஒன்றைப் பற்றி வினவ,அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட சற்று தாமத மாயிற்று.அவர்கள் பொறுமையை மேற் கொண்டு “மாஷா அல்லாஹு கான”  என்று கூறினர்.

இவ்வாறு கூறி இறைவனின் நாட்டத்திற்கு தலை சாயத்ததன் காரணமாக அவர்கள் இதைக் கூறி வாய் மூடுமுன் அது நிறை வேறிவிட்டது . (கஸஸஸுல் அன்பியா)

Trackback URI | Comments RSS

Leave a Reply

You must be logged in to post a comment.