Feed on
Posts
Comments

அரபு மொழி உலகப் பெருமொழி

இன்று உலகில் வளம் பெற்ற மொழிகளும் வளம் பெறாத மொழிகளும் எழுத்து வடிவம் பெற்ற மொழிகளும்,எழுத்து வடிவம் பெறாது பேச்சு வழக்கில் மட்டும் இருந்து வரும் மொழிகளுமாக இன்று சுமார் 6600 மொழிகள் வரை காணமுடிகிறது.அவற்றுள் தொன்மை யானதும், இலக்கிய இலக்கண வனப்பும் பெற்ற சிலமொழிகளில் அரபு மொழி முதன்மை யானது என்பதை உலகமே ஒப:புக் கொண்டுள்ளது. அதற்கு இறையருள் வேதமாம் அல் குர்ஆனே மிகப்பெரும் சான்றாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகார மொழி!

உலகின் 6600 மொழிகளில் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ள ஆறு மொழிகளில் அரபு மொழியும் ஒன்றாகும்.

ஆறு மொழிகள்

அவை:  1. ஆங்கிலம்,2. அரபிக்,3. ரஷ்யன்,4. பிரான்சு,5. ஸ்பானிஷ், 6.சைனா மொழிகள்.

இந்த மொழிகள் மட்டுமே அங்கு பேசும் மொழிகளாகவும், ஆவணப் பரிமாற்ற பதிவு மொழிகளாகவும் மொழியாக்கம் செய்யப்படும் அங்கீகார (Official) மொழிகளாகவும் உள்ளன. இவற்றுள் அரபு மொழி அங்கே தனித்தன்மையுடன் விளங்குவது பெருமைக் குரியதாகும். இன்று அரபு மொழி உலக அரங்கில் வர்த்தக மொழியாகவும், எல்லோரும் விரும்பிக்கற்கும் மொழிகாகவும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. அது மட்டுமல்ல, உலகின் புகழ் பெற்ற எல்லாப் பல்கலை கழகங்களிலும் அரபு மொழிக்கென தனித்துறையே அமைத்துள்ளனர்.

எனவே, அரபு பொழியை உலக மக்கள் அனைவரும் கற்பது காலத்தின் கட்டாயமாகும்.

Trackback URI | Comments RSS

Leave a Reply

You must be logged in to post a comment.