மூஸா நபியின் பத்து கட்டளைகள்
August 31st, 2007 by Ahmad Baqavi
وصايا موسي العشر
மூஸா நபியின் பத்து கட்டளைகள்
மூஸா(அலை) அவர்களுக்கு (முப்பதுடன் பத்தும் சேர்த்து நாற்பது நாட்கள் நோன்பும் நோற்றபின் 7:142) இறைவனால் தவ்ராத் வேதமும் பத்து இறைக்கட்டளைகளும் அருளப்பட்டன.
அவர்களுக்கு வழங்கப்பட்ட பத்து இறைக்கட்டளைப் பற்றி யூத கிறித்தவ வேதங்களில் என்ன கூறப்பட்டுள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள ஆசப்படுகிறோம். இதைப்போன்று இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும் பத்து கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பத்து கட்டளைகள் குறித்து குர்ஆனிலும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து மனித இனத்திற்குத் தேவையான பொதுவான உபதேசங்கள் எல்லா வேதங்களிலும் ஒரே மாதிரியாகவே காணப்படுகின்றன. என்பதை புரிந்து கொள்கிறோம்.பின்னர் மனிதனது வளர்ச்சி,தேவைகளை அனுசரித்து காலத்திற்கும்,சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அந்தந்த சமுதாயத்தினருக்கு தனித்தனியாக வேதங்களும், கட்டளைகளும் வழங்கபட்டுள்ளன.
இப்போது நபி மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேதக்கட்டளைகளைப் பார்ப்போம்.
பத்துக்கட்டளைகள்
1. வணங்குதற்குரியோன் என்னைத்தவிர வேறு எவருமில்லை.
எனவே எனக்கு இணைவைக்கக்கூடாது.
2. என் பெயரில் பொய் சத்தியம் செய்வது கூடாது.
3. வாரத்தில் ஒருநாளான சனிக்கிழமையை வணக்கநாளாகக் கொள்வது.
4. உன் தாய், தந்தையருக்கு மரியாதை செலுத்துவாயாக!
5. எனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவாயாக!
6. கொலை செய்யாதீர்!
7. விபச்சாரம் செய்யாதீர்!
8. திருடாதீர்!
9. பிறருக்கு எதிராக பொய் சாட்சி கூறாதீர்!
10.அண்டை வீட்டார் மனைவியைப் பார்க்கவோ ஆசைப்படவோ செய்யாதீர்!
வேலைக்கார அடிமை,அடிமைப்பெண்,கால்நடைகள் மீதும் ஆசையுறாதீர்!
(பொறாமைப்படாதீர்!) ஆதார நூல்கள் : கஸஸுல் குர்ஆன், கஸஸுல்
அன்பியா. அறிவிப்பவர் : இமாம் : இப்னு கதீர்)
இந்த பத்து கட்டளைகளை இமாம் தஹபீ (ரஹ்) அவர்கள்,அராயிஸுல் மஜாலிஸ் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
மூஸா நபியின் பத்து கட்டளைகள்!
1. வணங்குதற்குரியோன் என்னைத்தவிர வேறு எவருமில்லை.
எனவே எனக்கு இணைவைக்கக்கூடாது.
2. எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்திக் கொண்டிருப்பாயாக
அதனால், நீண்ட ஆயுளைப் பெறுவாய்.
3. கொல்லவேண்டாம் என்று அல்லாஹ் தடுத்துள்ள எவரையும்
கொல்லாதீர்கள். கொன்றால் பூமியிலும் உனக்கு இடமில்லாமல்
போய்விடும்.
4. என் பெயரில் பொய் சத்தியம் செய்யாதீர்.
5. செவியால் கேளாத, கண்ணால் காணாத, இதயத்தால் தெளியாத
எதற்கும் சாட்சி கூறாதீர்.
6. நான் மற்றவர்களுக்கு அளித்த அருட்கொடைகளைப்பற்றி
பொறாமைப்படாதீர்.
7. விபச்சாரம் செய்யாதீர்! திருடாதீர்!செய்யின் என் அருட்கதவு மூடப்படும்.
8. என்னைத்தவிர வேறு எவருக்கும் பலியிடாதீர்! என் பெயர் கூறி
அறுக்கப்படாத எந்தப்பலியும் ஏற்கப்படமாட்டாது.
9. அண்டை வீட்டார் மனைவி மீது ஆசையுறாதீர்! அது பாவத்திலெல்லாம்
பெரும் பாவமாகும்.
10.நீ விரும்புவதை மற்றவருக்கும் வீரும்புவாயாக! நீவெறுப்பதை
மற்றவருக்கும் வெறுப்பாயாக!
இவை திருக்குர்ஆனிலுள்ள 6:151,152-வது வசனங்களில் பொதிந்துள்ளவையே இக்கட்டளைகள் என குர்ஆன் விரிவுரையாளர்கள் எனக்கூறுகின்றனர்.
தொடரும்….
Leave a Reply
You must be logged in to post a comment.