ஹிஜரத் ஒரு மாபெரும் சகாப்தம்-1
February 3rd, 2010 by Ahmad Baqavi
ஹிஜ்ரத் ஒரு மாபெரும் சகாப்தம்
முஹர்ரம் மாதம் பிறந்ததும் இஸ்லாமிய புத்தாண்டின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு தியாகத்தின் நினைவே பளிச்சிடுகிறது. 1429ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற உயிர் தியாகங்கள் சுவடு பதித்த தடயங்கள், இரத்தம் சிந்திய நாட்கள், கொள்கைக்காக பிறந்த பொன்னாட்டை இழந்த நினைவுகள் அலை அலையாய் மனக்கண் முன் பளிச்சிடுகின்றன. இப்படியொரு வரலாற்றை உலகம் கண்டதில்லை. கேட்டதில்லை. வரலாறும் பதித்ததில்லை.
ஆம்! வரலாற்றில் மின்னிடும் அந்த வைர வரிகளைப் படிக்கும் போதே கண்கள் குளமாகின்றன. தியாகத்தின் சிகரமாக விளங்கும் அந்த பொன்னாட்களை மனதிற் கொண்டு ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வுக்காகவும் அவன் தூதருக்காகவும், தூதர் காட்டிய தீன் நெறியைக் காப்பதற்காகவும் வீர சபதம் செய்து துடிப்போடு செயல்பட வேண்டிய நாட்களைத்தான் நினைவு படுத்துகின்றன. அந்த நாட்களை எண்ணிப்பார்ப்போர் எத்தனை பேர்?
இஸ்லாம் புத்துயிர் பெற வேண்டிய ஒளிமிக்க அந்த நாட்களை குழி தோண்டிப் புதைத்து விட்டு, தீயிலே போட்டு ,காலிலே மிதித்து, மார்பிலே அடித்து இரத்தத்தை ஆறாக ஓட்டி அநாகரிகமாக நடந்து கொள்ளும் காட்டுமிராண்டித்தனத்தை என்னென்பது?
இஸ்லாம் அறிவுக்கேற்ற மார்க்கம் என வானளாவப் புகழ்ந்துவிட்டு நமது மக்கள் செய்யும் அநாகரிகச் செயல்களை நமது சமுதாயம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா? இப்போது வரலாறைப்புரட்டி அதன் பின்னணிகளைப் பார்ப்போம்.
ஹிஜ்ரத் என்றால் என்ன ?
ஹிஜ்ரத் என்றால் என்ன ? அதன் பொருள் என்ன ? அதன் நோக்கம் என்ன ? அது போதிக்கும் பாடம் என்ன ? போதனை என்ன ? நாம் செய்யவேண்டியவை என்னெ;ன?
எதற்காக ஹிஜ்ரத் செய்ய வேண்டும் ? அதனால் விளைந்த நன்மைகள் என்ன ? யார் யார் ஹஜ்ரத் செய்தார்கள் ? எந்தெந்த சூழ்நிலையில் ஹிஜ்ரத் செய்தார்கள் ? இதற்கு முன்னர் யாரேனும் ஹிஜ்ரத் செய்திருக்கிறார்களா?
ஹிஜ்ரி ஆண்டு ஏன் துவங்கப்பட்டது ? அதற்கு முன் எவ்வாறு ஆண்டுகளைக் கணித்து வந்தார்கள் ? யார் காலத்தில் ஹிஜ்ரி ஆண்டு துவங்கியது ? எதை மையமாக வைத்துத் துவங்கினார்கள் ? ஏன் முஹர்ரம் மாதத்திலிருந்து துவங்கவேண்டும்? கி.பி ஆண்டுக்கும் ஹிஜ்ரி ஆண்டுக்கும் இடையே வித்தியாசம் வருகிறதே? இந்த வித்தியாசத்தை கண்டு பிடிப்பது எப்படி? நாம் புத்தண்டு கொண்டாடலாமா ? வாழ்த்துகள் கூறலாமா? வெறும் வாயினால் வாழ்த்துகள் கூறினால் ஹிஜ்ரிஆண்டின் மாண்பை உணந்துகௌ்ள முடியுமா?
இவை போன்ற பல் வேறு வினாக்கள் நம்மிடையே அலை அலையாய் எழுகின்றன ? அவற்றைப்பற்றி என்றாவது சிந்தித்திருப்போமா ? இதோ சிந்திக்க சில வரிகள்.
விடை காண இதோ படியுங்கள்!
ஹிஜ்ரத் என்றால் என்ன ?
ஹிஜ்ரத் என்பது அரபிச் சொல்லாகும். இந்த வினைச் சொல்லி லிருந்து ஹிஜ்ரன் – துண்டித்தல், ஹாஜிர்,முஹாஜிர், முஹாஜிரா- நாடு துறந்து சென்றவர்,ஹஜர – நண்பகல் வேளையில் சென்றார், ஹாஜிரீ, ஹாஜிரா, ஹஜீரா, மதிய வேளையில் சென்றவர், மஹ்ஜூர்,மஹ்ஜூரா- நாடு துறந்து சென்ற பூமி, ஃபஹ்ஜுர் : துறந்து செல் போன்ற பல்வேறு சொற்கள் பிறந்து ஒன்றோடொன்று தொடர்புடைய பொருள்களைக் காட்டுவதைக் காணலாம்.
‘ஹிஜ்ரத’ என்னும் பொருளைக் காட்டும் சொற்கள் குர்ஆனில் 18 வசனங்களில் 31 தடவைகள் வருகின்றன.
ஹிஜரத்தின் பொருள்.
1. உள்ளத்தால் ஒன்றை வெறுப்பது.
2. நாவால் ஒன்றை வெறுத்துரைப்பது
3. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு குடிபெயர்ந்து செல்வது
4. தம் உடலாலோ, உள்ளத்தாலோ, நாவாலோ பிறரைப் பிரிவதற்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
5. பொதுவாக பாவங்களைவிட்டு வெருண்டோடுவதற்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு ஹிஜ்ருன்,ஹிஜ்ரன் என்ற சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.
ஹிஜரத்திற்குப் பின்னரே இஸ்லாத்தின் முன்னேற்ற காலம் துவங்கியது. பெரும்பாலோரின் வாழ்விலும் உண்மை என்பதை வரலாற்றில் காணமுடிகிறது.
ஹிஜ்ரத் செய்தவர்களின் மாண்புகள்
முஹாஜிர்கள்
முஹாஜிர்கள்
إِنَّ الَّذِينَ آمَنُواْ وَالَّذِينَ هَاجَرُواْ وَجَاهَدُواْ فِي سَبِيلِ اللّهِ أُوْلَـئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللّهِ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ{218}
1) 02:218 அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்திருப்பவர்கள்,
َالَّذِينَ هَاجَرُواْ وَأُخْرِجُواْ مِن دِيَارِهِمْ وَأُوذُواْ فِي سَبِيلِي وَقَاتَلُواْ وَقُتِلُواْ لأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ ثَوَاباً مِّن عِندِ اللّهِ وَاللّهُ عِندَهُ حُسْنُ الثَّوَابِ{195}
2) 03:195 இவர்களின் பாவங்கள் அழிக்கப்படும், சொர்க்கம் பரிசாகக் கிடைக்கும்.
الَّذِينَ آمَنُواْ وَهَاجَرُواْ وَجَاهَدُواْ فِي سَبِيلِ اللّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِندَ اللّهِ وَأُوْلَئِكَ هُمُ الْفَائِزُونَ{20} يُبَشِّرُهُمْ رَبُّهُم بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَجَنَّاتٍ لَّهُمْ فِيهَا نَعِيمٌ مُّقِيمٌ{21}
3) 09.020 இறைவனிடம் மகத்தான கூலியுண்டு
وَأُوْلَئِكَ هُمُ الْفَائِزُونَ
4) 09.020 அவர்களே வெற்றியாளர்கள்
4) 09:020 இவ்வுலகில் அழகிய முறையில் குடியமர்த்தப்படுவர்.
5) 22:058 அல்லாஹ் அவர்களுக்கு அழகான முறையில் உணவளிப்பான்.
وَالَّذِينَ هَاجَرُوا فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ قُتِلُوا أَوْ مَاتُوا لَيَرْزُقَنَّهُمُ اللَّهُ رِزْقاً حَسَناً وَإِنَّ اللَّهَ لَهُوَ خَيْرُ الرَّازِقِينَ{58}
لَيُدْخِلَنَّهُم مُّدْخَلاً يَرْضَوْنَهُ وَإِنَّ اللَّهَ لَعَلِيمٌ حَلِيمٌ{59}
6) 04:100 தியாகம் செய்து மரணிப்போருக்கு கூலி வழங்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான்.
وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَداً ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ{100}
7) 09:100 அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்கிறான்.
َقَد تَّابَ الله عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالأَنصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِن بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَؤُوفٌ رَّحِيمٌ{117}
8) 09:117 சிரமமான கால கட்டத்தில் பின்பற்றியோரை மன்னத்தருள்கிறான்.
لِلْفُقَرَاء الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِن دِيارِهِمْ وَأَمْوَالِهِمْ يَبْتَغُونَ فَضْلاً مِّنَ اللَّهِ وَرِضْوَاناً وَيَنصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ أُوْلَئِكَ هُمُ الصَّادِقُونَ{8} وَالَّذِينَ تَبَوَّؤُوا الدَّارَ وَالْإِيمَانَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ{9}
9) 59:008 வீட்டையும் பொருளையும் இறை திருப்தி ஒன்றிற்காக நாடுதுறந்தோருக்கு இறைவன் மகத்தான உதவிகள் புரிவான்.
أُوْلَئِكَ هُمُ الصَّادِقُونَ{8}
10 59:08 இவர்களே (ஸாதிகூன்) உண்மையாளர்கள.
என இவர்களின் மாண்புகள் பல இடங்களில் பறைசாற்றப்படுகின்றன.
முதன் முதலில் ஹிஜரத் செயதவர்கள்:-
1. நபி ஆதம் (அலை) அவர்கள் :-
iஷத்தான் ஆதம் (அலை) அவர்களை சுவர்க்கத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.
இடம் பெயர வைத்தான்.
அவ்விருவரையும் iஷத்தான் அங்கிருந்து (சுவர்க்கத்திலிருந்து) அப்புறப் படுத்தினான். அவர்கள் இருந்த உயர்ந்த நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் சிலருக்கு எதிரிகள். உங்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன. என்றும் கூறினோம். என குர்ஆன் வசனம் 2: 36 கூறுகிறது.
இது உலகில் நிகழ்ந்த முதல் ஹிஜ்ரத் என குர்ஆன் விரிவுரையாளர்களில் சிலர் குறிப்பிடுகின்றனர்.
2. நபி நூஹ் (அலை) அவர்கள்
2. நபி நூஹ் (அலை) அவர்கள்
கப்பல் ஒன்றைச் செய்து மக்களை ஏற்றிக் கொண்டு ஹிஜ்ரத் புறப்படுமாறு இறைவன் ஆணையிட்டான். அவர்கள் கூஃபாவுக்கு அருகிலுள்ள ஊரிலிந்து ஜூதி மலை வரை ஹிஜ்ரத் செய்தார்கள். குர்ஆன் இதனை 11:38, 11:44 வசனங்களில் விவரிக்கிறது.
وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلأٌ مِّن قَوْمِهِ سَخِرُواْ مِنْهُ قَالَ إِن تَسْخَرُواْ مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كَمَا تَسْخَرُونَ{38} فَسَوْفَ تَعْلَمُونَ مَن يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيمٌ{39} حَتَّى إِذَا جَاء أَمْرُنَا وَفَارَ التَّنُّورُ قُلْنَا احْمِلْ فِيهَا مِن كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلاَّ مَن سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ وَمَا آمَنَ مَعَهُ إِلاَّ قَلِيلٌ{40} وَقَالَ ارْكَبُواْ فِيهَا بِسْمِ اللّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ{41} وَهِيَ تَجْرِي بِهِمْ فِي مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَى نُوحٌ ابْنَهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَا بُنَيَّ ارْكَب مَّعَنَا وَلاَ تَكُن مَّعَ الْكَافِرِينَ{42} قَالَ سَآوِي إِلَى جَبَلٍ يَعْصِمُنِي مِنَ الْمَاء قَالَ لاَ عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللّهِ إِلاَّ مَن رَّحِمَ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ{43} وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءكِ وَيَا سَمَاء أَقْلِعِي وَغِيضَ الْمَاء وَقُضِيَ الأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْداً لِّلْقَوْمِ الظَّالِمِينَ{44}
3. நபி இப்றாஹீம் (அலை) அவர்கள்
1.ஹர்ரான் என்ற ஊருக்கு தமது மனைவி ஸாராவுடனும் சகோதரர் லூத்துடனும் ஒருமுறையும், ஹர்ராhனிலிருந்து பாலஸ்தீனுக்கு மறறொரு முறையும் ஹிஜ்ரத் சென்றார்கள்.
2.பின்னர் ‘வூர்’ என்ற ஊரிலிருந்து ‘பலஸ்தீன்’ வரை இன்னொரு முறையும்,
3. அதன் பிறகு எகிப்து (மிஸ்ர்) வரையும்,
4. அதன் பிறகு தம் மனைவி ஹாஜர் உடனும், மகன் இஸமாயீலுடனும் மக்காவுக்கு இறை ஆணைப்படி ஹிஜ்ரத் செய்தனர்.
4. நபி மூஸா (அலை) அவர்கள்
1. எகிப்திலிருந்து ‘மத்யன்’ வரை தனியாகவும்,
2. மத்யனிலிருந்து திரும்பி வந்து மீண்டும் எகிப்திலிருந்து தம் மக்களோடுஇறை ஆணைப்படி(பல இடங்களுக்கும்) பயணம் புறப்பட்டதாக குர்ஆன் 20:77
வசனம் தெரிவிக்கிறது.
5. நபி (ஸல்) அவர்கள்
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரி 1-ஆம் ஆண்டு ஹிஜ்ரத் புறப்பட்டார்கள்.
அபிஸீனியாவுக்கு முதல் ஹிஜ்ரத் (11 ஆண்களும், 4 பெண்களும்)
இதற்கிடையே நபிகள் நாயகம் (ஸல்) மக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, நபித் தோழர்கள் மக்கா குரைஷpகளின் கொடுமை தாங்காது 11 ஆண்களும், 4 பெண்களும் நபியவர்களின் ஆணைப்படி அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றனர்.
அவர்களில் உத்மான் (ரலி) அவர்களும,அவர்களது மனைவி ருகையாவும் இருந்தனர். இவர்களைப் பற்றி குறிப்பிடும் போது நபி (ஸல்) அவர்கள் ‘ நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) இருவருக்குப்பிறகு ஹிஜ்ரத் செய்த முதல் ஜோடி இவர்கள் தான்’ என்றனர்.
அபிஸீனியாவுக்கு இரண்டாம் ஹிஜ்ரத் (83 ஆண்களும்,18 பெண்களும்)
ஜஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களின் தலைமையில் 83 ஆண்களும்,18 பெண்களும் ஹிஜரத் சென்றனர்.
மதீனாவுக்கு ஹிஜ்ரத்
குரைஷpகளின் கொடுமை தாங்காது செல்லவே நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்கள் பலரை மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
இவர்களில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்,சிறுமியர், முதியோர், கண்தெதரியாத குருடர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு வாகனங்க ளிலும் ஏன் கால நடையாகவும் சென்றவர் பலர் வரலாற்றிலே ஒளிவீசிக் கொண்டிருக்கின்றனர். இதோ அவர்களில் சிலர்:-
ஸுஹைப் ரூமி (ரலி)
தமது உடமைகளைப் பாதுகாப்பான இடத்தில் மறைத்துவிட்டு ஸுஹைப் ரூமி அவர்கள் மக்காவிலிருந்து மதீனா புறப்பட்டபோது எதிரிகள் புடைசூழநின்று ஆயதங்களை; தாங்கிக் கொண்டு அவர்களை வன்மையாக எதிர்த்தார்கள்.எங்கள் நாட்டிலே பிழைப்புக்காக வந்து பணம் சம்பாதித்து விட்டு அதை எடுத்துச் செல்வதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். நான் எதையும் எடுத்துச செல்லவில்லை. வெறும் கையுடன் தான் செலகிறேன் என எவ்வளவோ கூறியும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
கடுமையாக எதிர்த்தபோது அம்பெய்வதில் வல்லவரான ஸுஹைப் (ரலி), அவர்களை எதிர்கொண்டு தாக்குவதற்கு ஆயத்தமானார்கள். நிலைமை மோசமானதும் ‘உங்களுக்கு என்ன வேண்டும்? அவற்றைத் தருகிறேன்’என்றதும் ‘நீர் தேடிவைத்திருக்கும் உடைமைகளும் செல்வங்களும்; எங்களுக்கு வேண்டும். அவற்றைத்; தந்துவிட்டுச் செல்வதாயின் உம்மை விட்டுவிடுகிறோம் என்றார்கள்.
அதற்குச் சம்மதித்த்தார்கள். செல்வங்களை புதைத்து வைத்திருந்த இடத்தை காட்டிவிட்டு ‘என் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்துச் சம்பாதித்த செல்வங்கள் இதோ உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்’ எனக்கூறி வெறும் கையுடன் மதீனாவுக்கு புறப்பட்டார்கள்.
அவர்களைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் ‘ரபிஹல் பைஉ’ யாஅபா யஹ்யா! அபூ யஹயாவே! உமது வியாபாரம் பெரும் இலாபத்தைத் தந்துவிட்டது. என மூன்று மறை கூறி மகிழ்ச்சி பொங்க வாழ்த்தினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு முன் எவருமே இங்கு வரவில்லையே! எப்படி இந்தச் செயதி உங்களுத் தெரியும்? அதை வானவர்க்கோன் ஜிப்ரீல்(அலை)தான் உங்களுக்கு அறிவித்திருக்க வேண்டும் என வியப்பு மேலீட்டால் உரத்துக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சற்றுமுன்னர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து உமது செய்தியைச் சொல்லிவிட்டு இறைவனின் வேதவசன அறிவிப்பான (2:207)
وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاء مَرْضَاتِ اللّهِ وَاللّهُ رَؤُوفٌ بِالْعِبَادِ }البقرة207
அல்லாஹ்வின் திருப்தியை பெறுவதற்காக தம்மையே விற்றுவிடக்கூடியவர்களும் (அர்ப்பணிப்பவர்களும்) மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ் அடியார்களின் மீது இரக்கமுள்ளவன். 2:207) வசனத்தையும்; தெரிவித்தார்கள்.
உம்மு ஸலமா (ரலி)
உம்மு ஸலமா(ரலி) அவர்கள், தமது பச்சிளம் குழந்தையுடன் கணவர் அபூ ஸலமாவோடு இரகசியமாக மதீனாவுக்குப் புறப்பட்டார்கள. எப்படியோ செய்தி உறவினர்களும், ஊராரும் தெரிந்துவிடவே குழந்தையையும் அவரிடமிருந்து பறித்து விட்டு அவர்களையும் வீட்டிற்கு அழைத்துவந்து விட்டார்கள்.
அபூஸலமாவோ தாயும் குழந்தையும் பாதுகாப்போடு உள்ளனர் என்பதை உறுதிசெய்துவிட்டு மதீனாவுக்குத் தப்பி ஓடிவிட்டார்கள்.
நபிகளாருடனும், தம் கணவரோடும் எப்படியாவது மதீனாவில் போய் இணைந்துவிட வேண்டுமென்று ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் வீட்டை விட்டு தன்யீம் வரை நடந்து வந்துவிடுவார்கள். அங்கே யாராவது தம்மை மதீனாவுக்கு அழைத்துச் செல்லமாட்டார்களா ? என ஏங்கி நிற்பார்கள், எவ்வளவு காலம் தெரியுமா ? ஒருநாளல்ல,, ஒருவாரமல்ல.,ஒருமாதமல்ல.,ஒருவருகாலமாக காத்துக் கிடந்தார்கள். இறுதியாக ஊர்மக்களே இரக்கப்பட்டு அவர்களைப்; போக அனுமதித்தார்கள். அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் பாதுகாப்பாக மதீனா வரை அழைத்து வந்தார். இவரே பிற்காலத்தில் தமது கணவர் ஒஹதுப் போரில் ஷஹீதான பிறகு பெருமானாரின் மனைவியாகும் பேறு பெற்ற உம்முல் முஃமினீன் அன்னை உம்மு ஸலமா (ரலீ) அவர்களாவர்.
உம்மு குல்து{ம் பின்து உக்பா (ரலி)
கால்நடையாக ஹிஜ்ரத் சென்றோர் பலர். அதிலும் தன்னந்தனியாக மிகத்துணிவோடு சென்றவர் இந்த அம்மையார். இவர்களின் மாண்பினைத் தெரிந்து நபித் தோழர் ஸைது பின் ஹாரிதா (ரலி) அவர்கள் இவர்களைத் தம் கரம் பற்றித் திருமணம் செய்து கொண்டார்கள்.
சிறுமி உம்மு ஹக்கீம் அல் முஸ்னிய்யா (ரலி)
இவர்கள் தம் சகோதரர் இஸ்ஹாக் அவர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு மதீனாவுக்குப் பறப்பட்டார்கள்.செலவிற்காக பணம் எடுக்கு வந்தபோது குரைஷpகள் கொலை செய்துவிட்டனர். வேறு வழிதெரியாது இவர்கள் தன்னந்தனியாக மதீனா வந்து சேர்ந்தார்கள்.
உம்மு காலிதா பின்த் காலித் (ரலி)
சிறுமியாக இருக்கும் போதே பெற்றோருடன் அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர். பின்னர் மதீனாவுக்கும் சிறுமியாகவே ஹிஜ்ரத் செய்தார்.
சிறுவர்கள்: முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ; (ரலி)
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) போன்ற பலர் தம் சிறு வயதிலேயே மதினாவுக்கு ஹஜ்ரத் சென்றுள்ளனர்.
கர்ப்பிணிப் பெண் அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி)
அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் நிறை மாதக் கர்பபிணியாக இருக்கும் போது 400 கிலோ மீட்டர் தொலைவை மேற்கொண்டு முடியாத அந்த நிலையிலும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் பயணம் மேற் கொண்டார்கள். குபா வந்து சேர்ந்ததும் பிரசவ வேதனை ஏற்பட்டு அங்கே அழகிய ஆண்மகவு பிறந்தது. அதுவே ஹஜரத்திற்குப்பிறகு முதன் மதலாகப் பிறந்த முஸ்லிம் குழந்தையாகும். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் என பெயர் சூட்டி பேரித்தம் பழத்தை தம் வாயினால் மென்று ஊட்டினார்கள்.
(குறிப்பு: ஜஃபர் இப்னு அபீதாலிப், அஸமா பின்த் உமைஸ் (ரலி) தம்பதியினருக்குப் பிறந்த அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் அவர்களே அபிஸீனியாவில் பிறந்த முதல் முஸ்லிம் குழந்தை எனபது குறிப்பிடத்தக்கது)
முதியவர் ஜுன்துப் இப்னு ளம்ரா (ரலி)
மக்காவில் மிகப் பெரிய செல்வந்தர். இஸ்லாத்தை ஏற்ற எல்லோரும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்கிறார்களே! தமக்கும் அப்பாக்கியம் கிடைக்காது போள் விடுமோ எனத்துடித்துக் கொண்டிருந்தார் எழுபது வயதான முதியவர் ஜுன்துப் அவர்கள்.
إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلآئِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ قَالُواْ فِيمَ كُنتُمْ قَالُواْ كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الأَرْضِ قَالْوَاْ أَلَمْ تَكُنْ
أَرْضُ اللّهِ وَاسِعَةً فَتُهَاجِرُواْ فِيهَا فَأُوْلَـئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَسَاءتْ مَصِيراً{97
குர்ஆனின் 4:97 வசனம்; அருளப்பட்டதும் அல்லாஹ்வுடைய பூமி விசாலமாக இருந்தும் தாங்கள் இருந்த இடத்தைவிட்டும் வெளிப்படாதவர்கள் ஒதுங்குமிடம் நரகம் தான் என்பதை புரிந்து கொண்டார் ஜுந்துப் (ரலி) அவர்கள்,
இந்த இணைவைப்பவர்களிடமிருந்து நானும் மதீனாவுக்குச் சென்றுவிடவேண்டும். நபி பெருமானாருக்கும் அன்சார் முஹாஜிர்களுக்கும் பெருமளவு உதவி செய்திடத் துடிக்கிறேன என்றும் கூறி தமது நான்கு மக்களிடமும் தன்னை ஒரு நாற்காலியில் சுமந்தாவது கொண்டு செல்லுமாறு வேண்டிக் கொண்டார். இதைச் செவியுற்றதும் அவவரது விருப்பப்படியே பிள்ளைகள் நான்கு பேரும் தன்யீம் என்ற இடம் வரை சுமந்து வந்தார்கள். ஆனால் உடல் நலிவுற்ற அவர்; அங்கே இறப் பெய்திவிட்டார்.
இதை அறிந்த மக்கத்துக் குரைஷpகள் ஏளனம் செய்யவே, இறைவன்
إِلاَّ الْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاء وَالْوِلْدَانِ لاَ يَسْتَطِيعُونَ حِيلَةً وَلاَ يَهْتَدُونَ سَبِيلاً{98}
فَأُوْلَـئِكَ عَسَى اللّهُ أَن يَعْفُوَ عَنْهُمْ وَكَانَ اللّهُ عَفُوّاً غَفُوراً{99}
4:98,99 வசனங்களை அருளி, ‘ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள்,மற்றும் சிறுவர்களைத்தவிர என விதிவிலக்கு அளித்து இவர்கள் எந்த தந்திரமும் செய்வதற்கும், வேறு வழியையும் அறியாதவர்கள். அல்லாஹ் இவர்களுக்கு மன்னிகப்பளிக்கப் போதுமானவன்’. என எதிரிகளின் வாய்களை மூடிவிட்டான்
Leave a Reply
You must be logged in to post a comment.