ஐம்பெரும் கடமைகளின் சொற்பொருள்
November 13th, 2009 by Ahmad Baqavi
ஐம்பெரும் கடமைகளின் சொற்பொருள்
ஷஹாதத் (شهادة)
அல்லாஹ்வை தனது இரட்சகனாகவும்இ அவனது இறுதித் தூதர் முஹம்மமத் நபி (ஸல்) அவர்களை அவனது இறுதிதத் தூதராகவும் மனமொழி மெய்களால் ஏற்று பிரகடனப்படுத்துவதற்கே ஷஹாதத் எனப்படும். இஸ்லாத்தை புதிதாக ஏற்பவர் சொல்லும் கலிமாவுக்கும் ஷஹாததத் எனக்கூறப்படும்.
ஸலாத் ( صلاة)
துஆ-பிரார்த்தனை என்பது பொருளாகும். மார்க்கத்தில் நின்றுஇ குனிந்துஇபணிந்து சிரம் தாழ்த்திச் செய்யும் வணக்கத்திற்கு ஸலாத்-தொழுகை எனப்படும்.
ஸவ்மு,ஸியாம் (صوم ، صبام )
தடுத்தல் எனப்பொருள்படும். மார்க்கத்தில் உண்பதுஇகுடிப்பதுஇ மனைவியுடன் உறவு கொளவது போன்ற குறிப்பிட்ட செயல்களை அதிகாலை முதல், மாலையில் சூரியன் மறைவது வரை தடுத்துக் கொளவதால் இதற்கு ஸவ்மு எனப் பெயர் ஏற்பட்டது.
ஸகாத் (زكوة)
தூய்மைப் படுத்ததல் என்பது அகராதிப்படி பொருளாகும். ஸகாத் என்னும் ஏழைவரியை வழங்குவதால் தாம் ஈட்டிய பொருள் தூய்மையடைகிறது. இதனால் இதற்கு தூய்மைப்படுத்துதல் எனப் பெயரேற்பட்டது.
ஹஜ்ஜு (حج)
என்றால் நாடுதல் என்பது பொருளாகும். முக்காவை நாடிச் சென்று ஹஜஜுடைய நாட்களான துல் ஹஜ்ஜு மாதத்தின் 8,9,10,11,12,13 ஆகிய நாட்களில் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்து இஹராம் கட்டி கஃபாவை வலம் வந்து, ஸபா மர்வாவில் (ஸயீ) ஓடிச்சென்று மினா, அரபாத், முஸ்தலிபா ஆகிய இடங்களில் செய்யும் கிரியைகளுக்கு ஹஜ்ஜு எனப்படும்.
Leave a Reply
You must be logged in to post a comment.