இன்று மக்காவை நோக்கி …
November 24th, 2009 by Ahmad Baqavi
இன்று மக்காவை நோக்கி …
சவூதி அரேபியாவிலிருந்தும் ஏன் ஏனைய அரபுநாடுகளிலிருந்தும் நாளை மினாவிலே கூடுவதற்காக கார்களிலும், பேருந்துகளிலும் சென்றவண்ணமுள்ளனர்.
உலக நாடுகளிலிருந்து ஹஜ்ஜிக்காக வந்து மக்காவிலே தங்கியுள்ள வர்கள் இன்றிரவே மினாவை நோக்கி பயணம் செய்ய தயாராக உள்ளனர். மதீனாவிலே வந்து சேர்ந்தவர்கள் நேற்றிலிருந்து மக்கா வந்து மக்காவிற்கருகிலே உள்ள அஸீஸியாவிலே தங்கியுள்ளனர்.
இன்று 50 சதவிகிதத்தினர் தவாப், ஸயீ போன்ற வணக்கங்களை முடித்துக் கொண்டு மினாவைப் போய் சேர்ந்துவிடுவர். ஏனையோர் நாளை அதிகாலையிலிருந்து மினாவில் வந்து குவிந்து விடுவர்.
ஹாஜிகள் கவனத்திற் கொள்க!
கஸ்ராகத் தொழவேண்டும்
அங்கே நாளை லுஹர்,அஸ்ர்,மஃரிப்,இஷா தொழுகைகளை தொழுதுவிட்டு அடுத்தநாள் அரபா நாளின் ஃபஜ்ரு தொழுகையை முடித்துவிட்டு அரபாவை நோக்கி பயணமாவர்.
மினாவிலே லுஹர், அஸ்ர்,இஷா ஆகிய நான்கு ரக்அத் தொழுகைகளை கஸ்ராகவே ( அதாவது நான்கு ரக்அத்களை சுருக்கி இரண்டு ரக்அத்களாகத்) தொழவேண்டும். அதுபோல அரபாத்திலும் முஸ்தலிபாவிலும் கஸராகவே தொழவேண்டும்.
கஸ்ரு ஜம்வு
அரபாத்திலே ஒரு பாங்கு சொல்லி இகாமத் கூறி லுஹரை கஸ்ராக தொழுதுவிட்டு ,அடுத்து மீண்டும் ஒரு இகாமத் கூறி அஸ்ரையும் கஸ்ராகத் தொழவேண்டும்.
அதுபோல அரபாத்திலே மஃரிப் தொழாது முஸதலிபா வந்து ஒரு பாங்கு சொல்லி இகாமத் கூறி முதலில் மஃரிபையும் இரண்டாவது ஒரு இகாமத் கூறி இஷாவை இரண்டுரக்அத்தாகச் சுருக்கித் தொழவேண்டும்.
மினாவிலே கருத்து வேறுபாடுகள்!
”நாங்கள் நான்காகத்தான் தொழுவோம்!.கஸ்ராகத் தொழமாட்டோம்! நாங்கள் முகீமாக- உள்ளுர் வாசியாக- ஆகிவிட்டோம்! என்று கூறுவோரும் எங்களுர் ஹஸ்ரத் அப்படித்தான் தொழவேண்டும் என்று வாதிடுவோரும் இங்கே தர்கித்துக் கொள்வோரும் உண்டு. இதில் மார்க்கம் படித்த ஆலிம்களே முன்னணியில் உள்ளனர் என்பது பரிதாபகரமானது.
இவர்களெல்லாம் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ் செய்தார்கள் எனபதையோ அது பற்றிய சட்டஙகள் என்ன எனபதைப் பற்றியோ தெரிந்து கொள்ளவிரும்பாது,
குதூ அன்னீ மனாஸிககும் ”
ஹஜ் வணக்கங்களை என்னிடமிருந்து தெரிந்து (நான் செய்தவாறே) செய்யுங்கள். என்று வரும் நபி(ஸல்) அவர்களின் உத்தரவை மதிக்காது தன்சுய விருப்பப்படி செயலாற்றுவது வேதனைக் குரியதாகும்.நபி (ஸல்) அவர்கள் சொல்லாதததைச் சொல்லி தம் சுய விருப்பப்படி செயலாற்றுவோர் நரகம் செல்வர் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை மிகவும் சிந்திக்கத் தக்கவையாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத் செய்து ஹஜ்ஜின் முழுப் பயனையும் பெற அருள் பொழிவானாக! அனைவரின் ஹ்ஜ்ஜையும் “ஹஜ்ஜன் மப்ரூராக ஒப்புக் கொளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள அல்லாஹ்வை வேண்டுகிறோம். ஆமீன்.
Leave a Reply
You must be logged in to post a comment.