ஹஜ்ஜிலே எழும் கேள்விகள்!-1
November 24th, 2009 by Ahmad Baqavi
ஹஜ்ஜிலே கேட்கப்பட்ட சில கேள்விகள் ?
1. மஃரிப் தொழுகைக்கு முன்னர் சுன்னத் தொழுலாமா ?
ஹஜ்ஜுக்கு வந்தவர்களில் சிலர் இங்கே மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுகிறார்களே? நமதூரில் தொழுவதில்லையே ? இதை இந்த வஹ்ஹாபிகள் தாமாகச் சோத்துக் கொண்டு புதுமையாகச் செய்கிறார்களே! இது இவர்களின் கைவரிசை என்று ஒரு சகோதரர் இவர்கள் மீது ஒரு பழியைச் சுமத்திவிட்டு இதற்கு ஹதீஸில் ஆதாரமிருக்கிறதா? என்று வேகமாகவும் வியப்பாகவும் கேட்டார்.
ஆம்! ஆதாரமிருக்கிறதே என்றோம். எங்கே? காட்டுங்கள் பார்க்கலாம் என்று சற்று ஏளனத் தொனியோடு கேட்டார் அந்த முதுகலைப் பட்டதாரியும் சட்டப்படிப்பு படித்தவருமான வழக்குரைஞரான அந்த சகோதரர்.
இதோ புகாரியில் முதல் பாகத்தில் 35வது பாடத்தில் மஃரிபுக்கு முன் தொழுவது என்ற தலைப்பில் வரும் பின்வரும் ஹதீஸின் பிரதியின் மூலத்தையும் தமிழாக்கத்தையும் காட்டியபோது நமது உலமாக்கள் இது பற்றி நமக்குச் சொல்லவே இல்லையே! ஏன் என்று மீண்டும் கேட்டார்.
இது பற்றிய ஞானம் அவர்களுக்கு இல்லை.அவர்கள் இது குறித்து வரும் நபிமொழிகளை படித்துப் பார்க்கவில்லை. தமக்குத் தெரியாதததல் இவ்வாறு ஒரு ஹதீஸ் இல்லவே இல்லையென்று அடித்துப் பேசுகிறார்கள். இவர்களின் அறியாமையை என்னென்பது?
இதோ அந்த நபி மொழிகள் :-
ஸஹீஹுல் புகாரி பாகம் 1 அத்தியாயம் 20
மஃரிபுக்கு முன் தொழுவது
‘ஹதீஸ் 1183. அப்துல்லாஹ்’ அல் முஸ்னி(ரலி) அவர்கள் கூறினார்கள்.
மஃரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃரிபுக்கு முன் தொழுங்கள். மஃரிபுக்கு முன் விரும்புயவர்கள் தொழுங்கள் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை (ஒரு கட்டயமான) ஸுன்னத்தாகக் கருதிவிடக்கூடாது. என்பதற்காகவே இவ்வாறு (இரண்டு முறை தொழுங்கள் என்று கூறிவிட்டு மூன்றாவது முறை விரும்பியவர் தெழட்டும் என்று) குறிப்பிட்டார்கள்.
‘ஹதீஸ் 1184. மர்ஸத் இப்னு அப்தில்லா’, அவர்கள் கூறினார்கள்.நான் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அவர்களிடம் சென்று அபூ தமீம் மஃரிபுக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களே, உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்து வந்தோம் என்று விடையளித்தார்கள்.
இப்போது ஏன்விட்டுவிட்டீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் (அஷ்ஷுஃலு) ” அலுவல்களே” காரணம் என்றார்கள்.
2. ஹஜ்ஜுடைய மாதங்கள் ஒன்று தானே!குர்ஆனில் அஷ்ஹுரும் மஃலூமத்
اأَشْهُرٌ مَّعْلُومَاتٌ
என்ற தொடரில் (2:197 )ஹஜ்ஜுடைய மாதங்கள் என பனமையாக கூறப்பட்டுள்ளதே ?
ஆம்! பன்மையாகத்தான் கூறப்பட்டுள்ளது. ஏன் தெரியுமா? ஹஜ்ஜுக்காக பயணம் மேற்கொள்வோர் முதலில் உம்ராவை நிறைவேற்றுவதற்காக ஷவ்வால் மாதமே வந்து உம்ராவை நிறைவேற்றிவிட்டு ஹஜ்ஜுக்காக மக்கவிலேயே தங்கி விடுவார்கள்.அவர்கள் ஷவ்வால், துல்கஃதா, துல் ஹஜ் 13 வரை இரண்டரை மாதங்கள் தங்கி தங்களின் ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டுத் திரும்புவதால் ஹஜ்ஜுடைய மாதங்கள் என் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.