Feed on
Posts
Comments

ஹஜ்ஜிலே கேட்கப்பட்ட சில கேள்விகள் ?

கே: இஹ்ராம் கட்டியவர் பல் தேய்க்கலாமா? பேஸ்டை பயன்படுத்தலாமா ?

பல் தேய்க்கலாம். இது நபி (ஸல்) அவர்களின் முக்கியமான சுன்னத் நடைமுறையில் உள்ளதாகும். ஹஜ்ஜின் போது  நபி (ஸல்) அவர்கள் பல்துலக்கியதாக ஏராளமான நபி மொழிகள் உள்ளன.

தாரளமாக பேஸ்டை  பயன்படுத்தலாம்.   இது இஹராமைப் பாதிக்காது. பேஸ்டைப பயனபடுத்தியவர் நன்றாக வாயைக் கொப்பளித்துக் கொள்ளவேண்டும்.

நறுமணம் பூசலாமா ?

இஹராம் கடிய பின் கூடாது. ஹஜ்ஜிற்கு முன்னர் ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசியிருக்கிறார்கள். ஆதாரம் (புகாரி) இஹராம் கட்டுவதற்கு முன்னர் தான  புசிக்கொள்ள அனுமதி உள்ளது.

இஹ்ராம் அணிந்த பின் குளிக்கக் கூடாது. மாற்று ஆடையும் அணியக் கூடாது எனக் கூறுகிறார்களே!.?

தாரளமாகக் குளிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் அரபா நாளில் குளித்ததாக  ஆதாரம் உள்ளது. குளிக்கும் போது உங்கள் செயலால் முடி விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாற்று ஆடைகள் அணிந்து கொள்ளலாம். இதற்கு எந்த தடையுமில்லை.

Trackback URI | Comments RSS

Leave a Reply

You must be logged in to post a comment.