தாஸூஆ,ஆஷூரா நோன்புகள்
December 23rd, 2009 by Ahmad Baqavi
தாஸூஆ,ஆஷூரா நோன்புகள்
ஆஷுரா என்றால் என்ன ?
தாஸூஆ என்றால் முஹர்ரம் மதாதத்தின் ஒன்பதாவது நாளுக்கும்.ஆஷுரா எனபது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளுக்கும்; கூறப்படும்.
இந்த நாளுக்கும் நோன்புக்கும் என்ன தொடர்பு ?
இந்நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் பிர்அவனிடமிருந்து காத்தருளியதால் அதற்கு நன்றி செலுத்து வதற்காக அவர்களும் அவர்களது மக்களும் நோன்பு நோற்று வந்தனர். இதனால் இந்நோன்புக்கு சிறப்பு ஏற்பட்டது.
ஆஷூராவின் பயன்
ஆஷூரா நாளின் நோன்பு பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு முந்திய ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாகும் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
ஆஷூரா நோன்பின் வகைகள்
ஆஷூராவின் போது மூன்று வகையாக நோன்பு நோற்கப்படுகின்றன.
முதல் வகை :ஆஷூராவின் முந்திய நாளும் அதற்குப் பிந்திய நாளுமாக (மூன்று நாட்கள்) நோன்பு நோற்பதாகும்.
இரண்டாவது வகை:ஒன்பதாவது நாளும் பத்தாவது நாளுமாக (இரண்டு நாட்கள்) நோன்பதாகும்.
மூன்றாவது வகை:பத்தாவது நாள் (ஒரு நாள்) மட்டும் நோன்பு நோற்பதாகும்.
இவற்றுள் நபி(ஸல்) அவர்களின் அறிவுரைப்படி இரண்டாவது வகையான இரு நாட்கள் நோன்பு நோற்பதே சிறப்பிற்குரியதாகும்.
ஏனைய நபிலான நோன்புகளைவிட முஹர்ரம் மாதத்தின் நோன்புக்கு ஏன் இத்தனை மாண்புகள்?
ரமளான் மாதத்தின் நோன்பிற்குப்பிறகு மாண்புடையது அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோன்புநோற்பதாகும் அறிவிப்பவர்: (அபூஹுரைரா (ரலி), ஆதாரம் முஸ்லிம்)
ஷஹ்ருல்லாஹ் அல்லாஹ்வுடைய மாதம் என அல்லாஹ்வின் மாதம் என முஹர்ரம் மாதத்தை இணைத்து கூறப்பட்டதன் நோக்கம் அதன் மாண்பைக் கருதித் தான்! ரமளான் மாதத்தைத்தவிர வேறு மாதத்திலும் முழுமையாக நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதில்லை. இதில் அதிகமான நாட்கள் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.