Feed on
Posts
Comments

சூரா ஃபாத்திஹாவின் விளக்கம்-2

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ 1

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ .2

அகில உலகையும் படைத்துக் காக்கும்; அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்

الرَّحْمـنِ الرَّحِيمِ .3

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

مَالِكِ يَوْمِ الدِّينِ .4

(அவன்) நியாhயத் தீர்ப்பு நாளின் அதிபதி.

إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ .5

(இறiவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ. 6

(இறiவா!) நீ எங்களை நேரான் வழியில் நடத்துவாயாக!

صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ .7

எவர்களுக்கு நீ பாக்கியம் புரிந்தாயோ, அவர்களின் வழியிலும்,எவர்கள்(உன்னால்) கோபிக்கப்படவில்லையோ அவர்கள் வழியிலும், எவர்கள் வழிகெடவில்லையோ அவர்களின் வழியிலும் (எங்களை வழி நடத்துவாயாக!)

மக்கிய்யா

திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ ( மக்காவுடன் தொடர்புடயவை) எனவும்,’மதனிய்யா’
(மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

இரு வகையான அத்தியாயங்களையும் ஆழ்ந்து நோக்கின் பின் வரும் பல வேறுபாடுகளைக் காணலாம்.
1. மக்கத்து மக்களில் பலருக்கு அரபி மொழியை எழுதப்படிக்கத் தெரியாதிருந்தும் இலக்கியத்தரத்துடன் பேசுவோராக இருந்தனர்.
2. இரத்தினச் சுருக்கமாகப் பேசுவோராகவுமிருந்தனர்.
3. எளிதில் புரிந்து கொளவோராகவுமிருந்தனர்.
இதனால் அவர்களின் தரத்திற்கேற்ப உயர்ந்த இலக்கிய நயத்துடன் மக்கிய்யா வசனங்கள் அருளப்பட்டன.

மதீனா வசனங்கள் அவ்வாறல்ல.
மதீனத்து யூதர்கள் எளிமையாகவும் விரிவாகவும் பேசுவோராகவும் அத்தகைய பேச்சுகளையே எளிதில் புரிந்து கொள்வோராகமிருந்தனர்.ஆகவே, அவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மதனிய்யா வசனங்கள் அமைந்திருந்தன.

மக்கிய்யா வசனங்களில் பெரும்பாலும் சட்டப் பிரச்சனைகள் விரிவாகப் பேசப்படவில்லை. மாறாக,

1. உலகம் அழியும் நாள்.
2. அதன் பயங்கள்,
3. அதன் பிறகு ஏற்படும் மறுமை வாழ்க்கை
4. இஸ்லாத்தின் கொள்கை விளக்கங்கள்.
5. எதிரிகளின் குருட்டுத்தனமான விமர்சினங்களுக்கு தக்க பதலளிப்பது
போன்றவை இடம் பெறுகின்றன.

மதனிய்யா அத்தியாயங்களில்
1. யூதர்களின் தில்லுமுல்லுகள்,
2. இறைவேதத்தில் அவர்கள் செய்த திருவிளையாடல்கள்
3. அவர்களின் இரட்டை வேடங்கள்
யாவும் தோலிருத்துக்; காட்டப்படுகின்றன. அதையடுத்து,

4. வணக்க வழிபாடுகள்,
5. அரசியல் சட்டங்கள்,
6. போர்கால நடவடிக்;கைகள்,
7. கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் பிரச்சனைகள்
8. வியாபார முறைகள்
8. திருமணச்சட்டங்கள்,
9. பாகப்பிரிவினைகள்
10.சமுதாயப்பிரச்சனைகள்
போன்ற பல சட்டங்கள், நெறிமுறைகள் விவரிக்கப்படுகின்றன.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாகத் திகழும் அல் பாத்திஹா மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.

ஃபாத்திஹாவின் மாண்புகள்
திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் சூரத்துல் பாத்திஹா அத்தியாயம் தனிச்சிறப்புகள் பல விளங்குகிறது.இந்த அத்தியாயம் குர்ஆனின் ஒரு அத்தியாமாக இருந்தாலும் இந்த அத்தியாத்தின் சிறப்பைப்பற்றி குர்ஆனின் ஒரு வசனமே எடுத்துரைக்கிறது. இது வேறு எந்த அத்தியாயத்திற்கும் இல்லாத தனிப் பெரும் சிறப்பாகும்.
அந்த வசனம் இதோ…

وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعاً مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ) الحجر87

நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம். குர்ஆன் 15:87.

திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் என்று இங்கே பொதுவாகக் கூறப்பட்டதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கும் போது பின்வருமாறு கூறினார்கள்.

மகத்தான குர்ஆன் என்பதும், திரும்பத் திரும்ப ஓதப்படுவது என்பதும் உம்முல் குர்ஆன் (என்னும் .பாத்திஹா) அத்தியாயமாகும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புகாரி)

குர்ஆனிலேயே மகத்தான பகுதி என்றும் திரும்பத் திரும்ப ஓதவேண்டும் என்றும் குர்ஆனே சிறப்பித்துக் கூறுவதால் இதற்கு நிகரான ஒருஅத்தியாயம் வேறில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஏராளமான நபிமொழிகளும் உள்ளன. இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றிக் கூறிய அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் வேறு எந்த அத்தியாயத்தையும் சிறப்பித்துக் கூறியதில்லை.

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து புறப்படுமுன் குர்ஆனில் உள்ள மகத்தான ஒரு அத்தியாயத்தை உனக்கு நான் கற்றுத் தருகிறேன் என்று கூறி என் கையையும் பிடித்துக் கொண்டனர். அவர்கள் பள்ளியிலிருந்து புறப்பட ஆயுத்தமானபோது ‘ அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனிலுள்ள ஒரு அத்தியாயத்தைக் கற்றுத் தருவதாகக் கூறினீர்களே! என்று நினைவு படுத்தினேன். ‘ஆம்! அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்னும் அல்ஃபாத்திஹா) என்பது தான் அந்த அத்தியாயம் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஸயீத் அல்முஅல்லா (அலி) (ரலி),ஆதாரம் : புகாரி, அஹ்மத்,அபூதாவூது, நஸாயீ,இப்னு மாஜா)

Trackback URI | Comments RSS

Leave a Reply

You must be logged in to post a comment.