Feed on
Posts
Comments

குருடர்கள்

இயலாதவர்களுக்கு ஹிஜரத்திற்கு விதிவிலக்கு அளிக்கபட்டிருந்தும், ‘ஹிஜ்ரத்தின் மிகப் பெரிய பாக்கியத்தை இழந்துவிடக்கூடாது. அதை அடைந்தே தீரவேண்டும்’ என்ற வீரஉறுதியுடன் கண்தெரியாத அந்தகர்களும் வரிந்து கொண்டு நின்றார்கள்.
அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் வரலாற்றை ஒளிபெறச் செய்கிறர்hகள்.

அவர்கள்:-
1) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி)
2) அபூ ஆமிருல் அஷ்அரீ (ரலி) (இவர் அபூ அஷ;அரீ என்ற புகழ் பெற்ற
நாயகத் தோழரின் சிறிய தகப்பனாராவார்)
3) அபூ அஹ்மத் இப்னு ஜஹஷ{ல் அஸதீ (ரலி). இவர் அன்னை ஸைனப்பின்த் ஜஹ்ஷ; (ரலீ அவர்களின் சகோதரர். இவரது மனைவி அபூஸுஃப்யானின் மனைவி ஃபாரிஆ ஆவார்.)
4) ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரலி). அபூபக்ர் (ரலி) அவர்களின்
அடிமையாயிருந்த இவர் குருடாக இருந்து பின்னர் பார்வை பெற்றார்)

இவர்களையெல்லாம் மதீனாவுக்கு ஹிஜ்ரத்திற்கு அனுப்பிவிட்டு இறைவனின் ஆணைவந்ததும் நபி (ஸல்) அவர்களும் தம் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்பட்டார்கள்.

இவர்களுடன் வழிகாட்ட அபூபக்ர் (ரலி) அவர்களின் அடிமை ஆமிர் இப்னு புஹைரா, அப்துல்லாஹ் இப்னு உரைகத் ஆகியோரும் சென்றனர்.

மூன்று நாட்கள் சென்று அலி(ரலி) அவர்களும் மதீனா புறப்பட்டனர்.

மக்காவைப் பிரிதல்

மக்காவிலிருந்து பிரிய மனமின்றி கண்ணீர் மல்கியவர்களாக புறப்படும் போது கூறிய வார்த்தைகள் நம் உள்ளத்தை உணர்ச்சிவசப்படச் செய்கின்றன. ஒரு மனிதருக்கு இருக்க வேண்டிய ஆன்மீகப் பற்றையும், தேசப்பற்றையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இறைவா! உனக்கு மிகவும் பிரியமான ஊரிலிருந்து என்னை வெளியேற்றுகின்றாய். உனக்கு மிகவும் உவப்பான ஊளரில் என்னை குடியமர்த்துவாயாக! மக்கா நகரே! நீயே அல்லாஹ்வுடைய நகரங்களில் எனக்கு மிகவும் பிரியமானதாக இருந்தாய். உன்னுடைய மக்கள் மட்டும் என்னை வெளியேற்றாவிட்டால் உன்னைவிட்(டு நான் புறப்பட);டிருக்க மாட்டேன். (ஆதாரம் : அர்ரஸூலுல் அஃளம்)

அவர்கள் யத்ரிபுக்கு வந்த பின் மக்காவின் நினைவு அடிக்கடி வந்தது.

الوطن، الوطن

அல்வதன்,அல்வதன்’ என் பிறந்தகமே!என் பிறந்தகமே! என்று கூறி வந்தார்கள். ஒருமுறை,’இளமையில் நான் அனாதையாக இருந்தேன். முதுமையில் அந்நியனாக இருக்கிறேன்.’ என்று வருத்தத்துடன் கூறினார்கள்.

குபாவில் 4 நாட்கள்

ஒன்பது நாட்கள் பயணம் செய்து நபியவர்கள் மதீனாவுக்கு அருகிலுள்ள குபாவில் வந்து தங்கினார்கள். நான்கு நாட்கள் அங்கே தங்கி தம் தோழர்களுடன் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். ‘தக்வாடைய அடிப்படையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் என அங்கீகரித்து இறைவன் நற்சான்றும் வழங்கி தம் திருமறை மூலம் உலகோருக்குப் பிரகடனப்படுத்தவும் செய்துள்ளான் (குர்ஆன் 9:108)

304 பேர் ஹிஜ்ரத் செய்தனர்.

மக்காவிலிருந்து சுமார் 304 பேர் வரை நாடுதுறந்து மதீனா வந்து அங்கே நபிகளாருடன் சங்கமமானார்கள். அதுமட்டுமல்ல, மதீனாவின் சூழலில் வாழ்ந்த மக்களையும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு கூறி முஸ்லிமகள் யாவரும் பலம் வாய்ந்த ஒரு சமுதாயமாக வாழ உத்தரவிட்hர்கள். உதிரிகளாக வாழ்வதால் எதிரிகளின் தீங்குகள் ஏற்படலாம். மதீனாவை வன்மைவாய்ந்த நகராக ஆக்கு வதற்குடிமேயாகும்;.

நபி(ஸல்) அவர்கள் மக்காவின் மீது படை நடத்திச் சென்றபோது ‘ ராபிஃ’ (மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே யான்பூ செல்லும் வழியிலுள்ள ஊர்) என்ற இடத்தில் நபியின் சிறிய தகப்பனார் அப்பாஸ் (ரலி) மூட்டை முடிச்சுகளோடு வந்தபோது அவர்களை மக்காவுக்கே திருப்பி அனுப்புமாறு கூறிவிட்டு ‘ நான் எவ்வாறு இறுதி நபியாக உள்ளேனோ அதே போன்று நீங்கள் முஹாஜிர்களில் இறுதியானவர் எனக் கூறினார்கள்.

இதன் மூலம் மக்கா வெற்றியைப் பற்றியும், மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செயவதற்கு முடிவு ஏற்படப் போவதையும் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

மதீனாவில் இஸ்லாம் வேரூன்றிய பின் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குடியேறினர்.மிகப்பெரும் சமுதாயமாக வாழ்ந்த அஸ்லம் கூட்டத்தினரும் வந்து குடியேறினர். அப்போது ‘இனி எவரும் மதீனாவுக்கு ஹிஜரத் செய்யவேண்டிய தில்லை. நீங்கள் உங்கள் ஊரிலேயே இருந்தால் போதும். உங்களுக்கு ஹிஜ்ரத் செய்த நற்கூலி கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

நாடு துறக்காமலிருக்க யாருக்கு அனுமதி?
இறைநம்பிக்கையாளர் இறைநம்பிக்கையற்ற சூழலில் தொடர்ந்து வாழ இரு காரணங்கள் இருக்க வேண்டும்.
1. இறை தூதரும், இறை தூதரைப் பின்பற்றியவர்களும் செய்து வந்த பணியை தொடர்ந்து செய்து இஸ்லாமிய அமைப்புக்கு சாதகமான சூழ்நிலையாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
2. முதுமை, பலவீனம்,நோய் போன்ற காரணங்களால் வேறு வழியே இல்லாது வெறுப்புடனும், சலிப்புடனும் வாழும் கட்டாயம் ஏற்பட்டிருக்க வேண்டும். இக்காரணங்களால் மட்டுமே ஹிஜ்ரத் செய்யாமலிருக்க மார்க்கத்தில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

ஹிஜ்ரத்தின் நோக்கம்
1. نشردعوة الاسلآمية
2. تأسيس الدولة الاسلآمية وتنظيم الادارة ، وتطبيق تعاليم العلاقات الاقتصادية والاجتماعية
3. قيام المجتمع الاسلامي الذي لا يعبد فيه سوي الله الواحد الاحد العلي القدير
4. تثبيت الاخوة الاسلامية كما كان بين المهاجرين والانصار )

1. இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தல்.
2. இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதல்.
3. ஏகத்துவ நெறியில் இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்குதல.;
4. இஸ்லாமிய சகோதரத்துவத்தை ஏற்படுத்துதல்.
5. குடியுரிமை, மாற்றுமதத்தினரும் வாழும் உரிமை, வணங்கும் உரிமை, பொருளீட்டும் உரிமையை வழங்குதல்.
6. ஏற்றத் தாழ்வை ஒழித்தல்.
7. சமுதாய வாழ்வில் நீதியை நிலைநாட்டுதல.;
8. குற்றவியலைத் தடுத்தல்;
9. பாரபட்சமற்ற முறையில் தண்டனை வழங்குதல்.
10. அமைதியை நிறுவி மகிழ்ச்சிகரமான வாழ்வை உருவாக்குதல்.

இவையே இஸ்லாம் விரும்பும் மறுமலர்ச்சியாகும். மனித சமுதாயம் உயர்ந்தோங்க நபி பெருமானர்h (ஸல்) காட்டிய வழியாகும்.

Trackback URI | Comments RSS

Leave a Reply

You must be logged in to post a comment.