அல்குர்ஆனை அணுகுவோம்!-1
February 27th, 2010 by Ahmad Baqavi
மக்கா தஃவா மையம், தன்யீம் தொழிற்பேட்டை அரங்கத்தில் 18.2.2010 ல் நடை பெற்ற மாபெரும் இஸ்லாமிய மாநாட்டில கலந்து கொண்டு நாம் ஆற்றிய உரையின் சுருக்கத்தை கீழே தருகிறோம். (ஆசிரியர்)
அல்-குர்ஆனை அணுகுவோம்!
என்பது இன்று நமது தலைப்பு! அருமையான தலைப்பு ! அவசியமான தலைப்பும் கூட!
அணுகுவோம்! ( Let’s upproach our Holy Quran”) என்று கூறும்போது நம்மில் பெரும்பாலோர் இன்னும் அந்த குர்ஆனை அணுகாமலே இருந்து வருகிறோம் எனப்புரிகிறது.
அப்படியானால், அந்தக் குர்ஆனின் அருமையை அது நிகழ்த்திய அதிசயத்தை உலகில் ஆற்றிய அரும் புரட்சியை முஸ்லிமகளாகிய நாம் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை தெரிய முயற்சிக்கவில்லை என்று தானே பொருள்.
இப்போது உலகின் முன் நாம் வெட்கித்தலை குனிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஏன் எனக்கேட்கிறீர்களா ?
ஒருகாலத்தில் நாம் குர்ஆனை பட்டுத்துணிக்குள் பொதிந்து வைத்திருந்தோம்.
பெட்டிக்குள் பூட்டி வைத்திருந்தோம். கைக்கு எட்டா விட்டத்தில் தூசுபடாமல் பாதுகாத்து வந்தோம். ஆம் அதன் நிலை :-
பட்டுத்துணிக்குள் சிறை
பெட்டிக்குள் சிறை!
விட்டத்தில் சிறை !
மரச்சட்டத்தில் சிறை! போதாதென்று பீங்கானில் எழுதி கரைத்துக்குடித்து வயிற்றுக்குள் சிறை!
குர்அனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தீர்களா?
இன்று அந்த நிலை மாறிவிட்டது! இருந்தாலும், கடந்த காலத்தை குறை சொல்லிவிட்டு,
இன்று எத்தனை பேர் அந்தக் குர்ஆனை தினந்தோறும் புரட்டுகிறோம்?
அதன் பொருளைப் புரிந்து ஓதுகிறோம ?
எத்தனை பாகங்கள் என்றால் சொல்லிவிடுவார்கள். அவை யாவை என்றால் விழிப்பார்கள்.
எத்தனை அத்தியாயங்கள் என்று கேட்டால் 114 என்று உடனே பதில் வந்து விடும் ஆனால், அவற்றை வரிசையாக சொல்லுங்களேன் என்றால் தலை குனிந்து கொள்வார்கள்.
சூரா பாத்திஹாவை நாளொன்றுக்கு 17 முதல் 40 தடவைகளுக்கு மேல் ஓதுகிறோம். அதை ஓதச்சொன்னால் ஓதிவிடுவார்கள். ஆனால் அதன் பொருளைக் கேட்டால் பதிலே வராது விழிப்பார்கள் ?
இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள தஃவா சென்டருக்கு வாருங்கள் என்றால் நாங்கள் இன்டெர் நெட்டிலும், தொலைக் காட்சியிலும் பார்ர்த்துத் தெரிந்து கொளவோம் என்பார்கள்.
அப்படியானால் சில அத்தியாயத்தை ஓதிக்காட்டுங்கள் என்று கேட்டால் திரு திரு என்று முழிப்பார்கள். அப்படி ஓதினாலும் தப்பு தபாகவே ஓதுவார்கள். சரியாகவே ஓத வராது தடுமாறி நிற்பதை பார்க்கிறோம். அது தான் நமது இன்றைய நிலை. சொல்வதற்கே வெடகமாக இருக்கிறது.
சில கேள்விகள்…
இனி, குர்அனை அணுகுவோம் என்றால், சில கேள்விகள்… எழுகின்றன.
1. இதுவரை நாம்மில் பெரும்பாலோர் அணுகவில்லை என்று பொருள்படுகிறது. அவ்வாறாயின்.
2. நாம் ஏன் அணுகவில்லை? அதற்குரிய காரணம் என்ன?
3.அணுகாமிலிருக்கத் தடையாக இருப்பவை என்ன?
4.உலகம் முழுவதும் குர்ஆனை நோக்கி வரும் போது நாம் அதைப்பற்றிசசிந்திக்காமலிருப்பது ஏன்? கவலைப்படாதது ஏன்?
5.சரி, நாம் ஏன் தை அணுக வேண்டும் ? (Why do we approach Quran? What is the benefit for us?)நமது காதில் விழுகிறது.
6.அதில் என்னதான் இருக்கிறது ? அதில் நமக்கென்ன இலாபம் ?
7. மனித வாழ்வுக்குத் தேவையானது அனைத்தும் அதில் உள்ளனவா?
8.இதுவரை அந்தக் குர்ஆன் செய்த புரட்சிகள் என்ன ?
9.உலகின் போக்கை மாற்றியிருக்கிறதா? உலகின் வரலாற்றை மாற்றியிருக்கிறதா ?
10.இவ்வளவு பழைமையான வேதாந்தம் இன்றைய அறிவியலுக்குப் பொருந்துகிறதா?
11.அதை இன்றைய அறிவியல் உலகம் ஒத்துக்கொள்கிறதா?
12.அதை ஆய்வு செய்த அறிவியல் மேதைகள், அறிஞர்கள் யாரேனும் அதை ஏற்று இஸ்லாத்திற்கு வந்துள்ளார்களா?
13.இந்த எண்ணம் ஏனைய மக்களிடமும் வந்துள்ளதா?
14.உலகமே அணி திரண்டு வரும்போது (முஸ்லிம்களாகப் பிறந்த) நாம் அதைபுரிந்து கொள்ள ஏதேனும் முயற்சிகள் செய்து வருகிறோமா ?
15.இதற்காக களமிறங்கி பணியாற்ற உலகம் முழுவதும் தஃவா சென்டர்கள், அமைப்புகள் ஆயிரமாயிரம் இயங்கிவருகின்ன. அது போன்ற தஃவா அமைப்புகளை நாம் அணுகி வருகிறோமா? அதன் மூலம் நாம் பயன்பெற்று வருகிறோமா?
16. அதற்கு நமது பங்களிப்புகள் என்னென்ன?
17.நாம் தஃவாவுக்காக நமது பங்காக யாரையேனும் அழைத்து வந்திருக்கிறோமா?
18.அதுவும் இஸ்லாம் வேரூன்றிய இந்த புனித மண்ணிலே வாழ்ந்து கொண்டு அதற்கான முயற்சிகள் ஆவனைகள் செய்துள்ளோமா ?
19. எத்தனை முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்து வந்திருக்கிறோம்.?
20.நாம் எந்தெந்த வகைகளில் மாற்று மதத்தவருக்கு முன்னோடியாக விளங்குகிறோம்?
போன்ற நியாயமான 20 கேள்விகள் அடுக்கடுக்காக நம்மில் எழுந்த வண்முள்ளன. நியாயமான கேள்விகள் தானே! சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நீங்கள் கேட்க வேண்டியப பல கேள்விகளை நானே கேட்டு அதற்கு விடையும் காண உங்கள் முன் நிற்கிறேன். அத்தனைக்கும் ஒருமணிநேரம் போதாதே! இருந்தாலும் முயச்சிப்போமாக!
முதலில் குர்ஆனின் முக்கியத்துவத்தை இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டால் அதில் அல்லாஹ் விவரிக்கும் உலகத்தின் வரலாறு உலக அதிசயங்கள், அறிவியல் உண்மைகள், வாழ்கை நெறிகள்,சட்ட திட்டங்கள் போன்ற அனைத்தையும் அதில் காணலாம்.
இறைவன் கூறுவதைக் கேளுங்கள்!
إِنْ هُوَ إِلاَّ ذِكْرَى لِلْعَالَمِينَ }الأنعام90
إِنْ هُوَ إِلاَّ ذِكْرٌ لِّلْعَالَمِينَ }يوسف104
{إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ }ص87
{إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ }التكوير27
அல்அன்ஆமில் 6:90, யூசுப் 12:104, ஸாத் 38:87, அத்தக்வீர் 81:27 -ல் 4 வசனங்கள்! நான்கு தடவைகள் ஓங்கி முழங்குகிறான்
1.இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமாகும் என்று கூறி, ‘ இது ஓர் உலகப் பொது மறை’ என்று அறிவிக்கிறான்.
مَّافَرَّطْنَا فِي الكِتَابِ مِن شَيْءٍ }الأنعام38
2.”நாம் (இவ்) வேத நூலில் எப்பொருளையும் எடுத்துரைக்காது விட்டு வைக்கவில்லை”.(அல்அன்ஆம் 6:38) என்ற வசனத்தின் மூலம்”‘இது மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்தையும் கூறும் அருள் மறை”என்று கூறுகிறான்.
அது மட்டுமா ?
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَاناً لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ }النحل89
3.”நாம் உங்களுக்கு ஒவ்வொரு விசயத்தையும் தெளிவாக விளக்கக் கூடிய இவ்வேதத்தை நாமே அருளினோம்” (16:89) என்று கூறி “அனைத்தையும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கும் வேத நூல்” என்றும் உலகுக்கு உணர்த்துகிறான்.
அதில் என்னதான் இல்லை ? உலகமே அதிசயிக்கும் அனைத்தும உள்ளன. (தொடரும்)…
Leave a Reply
You must be logged in to post a comment.