அருஞ் சொற்களஞ்சியம்-5
May 8th, 2010 by Ahmad Baqavi
(ந முதல் ஹ வரை. எழுத்தின் வரிசை :ந, வ,ள,ஜ,ஸ,ஷ,ஹ)
நஃபில்
نفل
உபரியானது. உபரியான வணக்கங்களுக்கும் (தொழுகைகளுக்கும்) இச்சொல் பயன்படுத் தப்படுகிறது.
வஸீலா (வாவு,ஸீன் எழுத்து)
وسيلة
உதவி தெடுதல் என்பது பொருளாகும். இறைவனிடம் தொழுகையின் மூலமாககவும் பொறுமையோடிருந்தும் உதவி தேடுங்கள். ( குர்ஆன்: 5:35) நபிமார்கள், அவ்லியாக்கள், இறந்து போன பெரியார்கள் மூலமாக வஸீலா என்ற பெயரில் வேண்டுவதற்கோ, உதவி தேடுவதற்கோ குர்ஆனிலோ, ஹதீஸிலோ எவ்வித ஆதார முமில்லை.
வஸீலா (வாவு,ஸ்வாது எழுத்து)
وصيلة
ஒரு தாய் ஆடு தொடர்ந்து இரு பெண் ஆடுகளை ஈன்றால் அந்தத் தாய் ஆட்டை தெய்வங்களுக்கென அரபுகள் விட்டு விடுவார்கள். இதை ‘வஸீலா’ (وصيلة ) எனக் கூறுவர்.
வஹ்யி
وحي
‘இறைச்செய்தி’. அல்லாஹ் தனது தூதர்களுக்கு அவ்வப்போது அருளும் இறைச்செய்தி்களுக்கு “வஹ்யி” எனப்படும். ( 6:19,6:106, 7:203,18:119,21:108,21:45,53:4,42:51,20:114,11:37,23:27 போன்று 75 இடங்களில் குர்ஆனில் இச்சொல் ஆளப்பட்டுள்ளன.
வலீமா
وليمة
“வலீமா”’ என்பது திருமணமாகி கணவனும் மனைவியும் இணைந்த பிறகு கொடுக்கும் விருந்திற்குப் பெயராகும்.
வாஜிப்
واجب
அவசியம் செய்யவேண்டியது. சிலபோது ஃபர்ளுக்கும் ஃபர்ளை அடுத்துச் செய்யவேண்டிய முக்கியக் கடமைகளுக்கும் மார்க்கத்தில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
ஜபல்
جبل
மலை. ஜபலுந்நூர் (அந்நூர்- ஹிரா மலை), இது நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்பட்ட மலை. ஜபலுத் தவ்ரு. (தவ்ரு மலை) இதில் தான் நபி (ஸல்) அவர்களும் , அவர்களின் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத்தின் போது தப்புவதற்காக எதிரிகளின் கண்களில் படாமல் மறைக்திருந்த இடம். ஜபலுர் ரஹ்மத் (அரஃபாத் மலை) இந்த இடத்தில் நின்று காண்டு தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ஹஜ்ஜத்துல் வதாஃ (இறுதி உரை) நிகழ்த்தினார்கள்.
ஜமீல்
جميل
அல்லாஹ்வின் திருப்புகழ்களில் ஒன்றான இதன் பொருள் “அழகானவன்” என்பதாகும். அல்லாஹ் தனது படைப்புகள் அனைத் தையும் அழகாகவே படைத்துள்ளான். ” இன்ல்லாஹ ஜமீலுன் யுஹிப்புல் ஜமால ” (அல்லாஹ் அழகு மயமானவன்.அவன் அழகை விரும்புகிறான்” என்று அலீ (ரலி) அவர்கள் கூறுகின்றனர். இதனால் தான் “அப்துல் ஜமீல்” அழகான அல்லாஹ்வின் அடிமை என அழகுடன் சேர்த்து பெயர் சூட்டிக் கொள்கின்றனர். ஜமீல் என்பதன் பெண்பால் “ஜமீலா” என்பதாகும். அழகு தோற்றத்தில் மட்டுமல்ல, குணத்தில்,பண்பில், பழக்கவழக்கங்களில் அனைத்திலும் அழகாககத் தோன்றுவதாகும்.
ஜனாஸா
جنازة
மரணித்தவரின் உடல்.ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக முஸ்லிமகள் ஜனாஸா தொழுகை நட்த்துவது ஃபர்ளு கிபாயாவாகும். ( பார்க்க: ஃபர்ளு கிஃபாயா)
ஜாலூத்
جالوت
2:2249,2:251
ஜின்
الجن
“ஜின்கள்” என்பவை மனிதக் கண்களுக்குப் புலப்படாத, இறைவனின் ஒரு படைப்பு.ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள். அல்-ஜின் என்ற பெயரில் குர்ஆனில் 72-வது அத்தியாமாக ஒரு அத்தியாயமும் உள்ளது.அதில முதல் வசனத்தில் ஜின் என்ற படைப்பைப்ற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு “ஜின்” என்று பெயர் வழங்கப்படுகிறது. (பார்க்க:அல்ஜின் அத்தியாயம்)
ஜிஸ்யா
جزية
காப்பு வரி.இஸலாமிய அரசின் கீழ் அதன் பாதுகாப்பைப் பெற்று முஸ்லிமல்லாத குடீமக்களுக்கு முஸ்லிம்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருந்தன.இந்த குடிமக்கள் போரில் கலந்து கொள்வதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தனர்.இந்த விதி விலக்கு அவர்கள் பாதுகாப்பாக வாழவும், வளரவும், வாணிபம் செய்யவும்,அவர்களின் வணக்கவழிபாடுகளைச் செய்யவும் வழி வகுத்தது. இந்த நியாயமான காரணங்களை முன்னிட்டு அவர்களிட மிருந்து மிகக்குறைந்த விகிதத்தில் வரி ஒன்று வசூலிக்கப்பட்டது. அதுவே “ஜிஸ்யா” காப்பு வரி எனப்படும்.
இந்த வரியிலிருந்து பெண்களும்,சிறுவர்களும், ஏழைகளும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தனர்.இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்த முஸ்லிம் அல்லாத அரசுகள் கூட இஸ்லாமியப் பேரரசு்கு இந்த வரியைக் கப்பமாகக் கட்டிவந்தன. நபி(ஸல்)அவர்களின் காலத்தில் குறைந்த அளவாக வருடத்திற்கு 10 திர்ஹங்கள் நிர்ணயிக்கப் பட்டிருந்தன.
ஸகாத்
زكوة
முஸ்லிம் செல்வந்தர்கள் மீது ஆண்டுக்கொரு முறை விதிக்கப்பட்ட மார்க்க வரி. 100 க்கு இரண்டரை சதவிகிதம் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.குர்ஆனில் 31 தடவைகள் கூறப்பட்டுள்ளன.(2: 43,83,110,177,277, 4:77,126,5:12,55, 9:5,11,18,71,18:81,19:13:31,55, 21:73,22:41,78,23:4,24:37,56,27:3,30:39, 31:4,33:33,41:7,58:13, 73:20, 98:5) (பார்க்க: இஸ்லாம் வழங்கும் ஸகாத்)
ஸஹாபி
صحابي
நபித்தோழர்.இஸ்லாத்தை ஏற்று நபியவர்களை நேரிற் கண்டு முஸ்லிமாக மரணித்தவர். இதன் பெண்பால் “ஸஹாபியத்” (நபித் தொழியர்) இவர்கள் சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டவர் களாவர். உலகிற் தோன்றிய மதபோதகர்களில் வாழ்ந்த காலத்திலே அதிகமான நண்பர்களைப் பெற்ற ஒரே தீர்க்கதரிசி நபிகள் நாயகம் (ஸல்) ஒருவரேயாவார்கள்.
ஸல்
صلي الله عليه وسل
ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்’ (அல்லாஹ் அவர்களுக்கு கருணையையும், சாந்தியையும் பொழிவானாக, என்பதன் சுருக்கம். இது இறை தூதர் முஹம்மத் (ஸல) அவர்களுக்காக இறைவனிடம் மக்கள் செய்யும் பிரார்த்தனை ஆகும்.எனவே நபி (ஸல்) அவர்களின் பெயருடன் இணைத்து இதைக் குறிப்பிடுவர்.இதை ஸலவாத் எனப்படும்.(பார்க்க: ஸலவாத்)
ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம்’ அல்லாஹ் அவருக்கு விசேஷ அருளையும் ஈடேற்றத்தையும் வழங்குவானாக!
ஸலாம்
سلام
இது முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கூறும் முகமன். அமைதி, நிம்மதி, சாந்தி ஆகியவை இதன் பொருளாகும். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றா கும்.ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சந்தித்தால் அவர் தெரிந்தவராகவோ, தெரியாதவராகவோ இருந்தாலும் அவருக்கு ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ உங்களுக்கு (அல்லாஹ்வின்) சாந்தி உண்டாவதாக! என்று முகமன் கூறவேண்டும். பதிலுக்கு மற்றவர் ” வஅலைக்குமுஸ்ஸலாம்” (அவ்வாறே உங்கள் மீதும் சாந்தி நிலவட்டுமாக) என்று கூறுவது அவரது (ஃபர்ளு)கடமையாகும்.
உலகில் எந்த இடத்திலும்,எந்த சூழ்நிலையிலும் மனிதனுக்குத் தேவையானது மன அமைதி. மகிழ்ச்சிகரமான நிலையிலும், துக்ககர மான சந்தர்பங்களிலும், ஏன் மரணவீட்டிலும் கூட தேவைப்படக் கூடியது மனஅமைதி.அமைதியில்லாது மனிதன் வாழவே முடியாது.
ஐந்து நபிமார்களுக்கு அல்லாஹ்வே “ஸலாம்” கூறி வாழ்த்துவதாக ஐந்து வசனங்கள் வருகின்றன. அவை: ஸலாமுன் அலா நூஹின் (37:79), ஸலாமுன் அலா இப்றாஹீம் (37:109, 21:69),ஸலாமுன் அலா மூஸா வஹாரூன் (37:120), ஸலாமுன் அலா இல்யாஸீன் (37:130) பொதுவாக “ஸலாம்” என்னும் சொல் குர்ஆனில் 42 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஸலாம் கூறும்போது ஸலாம் (11:69,25:63, 25:75,51:25,56:26,) என்றும், “ஸலாமுன் அலைக்கும்“, என்றும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றும் கூறலாம். (19:33,20:47)
ஸலாம். இறைவனின் திருநாமங்களில் ஒன்றாகும். அமைதியை அளிப்பவன் என்பது இதன் பொருள் (59:23)
ஸலாமுன் அலைக்கும்
سلام عليك ، سلام عليكم
குர்ஆனில் “ஸலாமுன் அலைக்க” (19:47) என்றும்,”ஸலாமுன் அலைக் கும்” (7:46,13:24,16:32,28:55) என்றும் ஸலாம் கூறப்படுவதைக் காணலாம்.
ஸயீ
سعي
ஹஜ்ஜு, உம்ராவுக்காக ஸஃபா, மர்வா ஆகிய இரு மலைகளுக்கு இடையில் ஏழுமுறை ஓடுவதற்கு ‘ஸயீ’ (விரைதல்)என்று சொல்லப் படும். ( இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த எனவரும் வசனம் ஸபா மர்வாவில் “ஸயீ ” செய்வதைப்பற்றிய செய்தியாகும். 2:158)
ஸலாத்-1
صلاة
இறைவனை வணங்குவதற்கு ஸலாத் (தொழுகை)எனப்படும். ( الصَّلاةَ “ஸலாத்” என்னும் சொல் குர்ஆனில் 61 இடங்களில் இடம் பெறுகின்றன)
ஸலாத்-2
صلاة
நபி (ஸல்)அவர்களை வாழ்த்தி துஆ செய்வதற்கு (ஸலவாத் சொல்வதற்கு)ம் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. “அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான்.வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கெண்டோரே! நீங்களும் அவருக்காக இறை அருளை (ஸலாத்தை) வேண்டுங்கள். ஸலாமும் கூறுங்கள் (33:56).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது எவ்வாறு ஸலவாத்துக் கூறுவது என நாயக்தோழாகள் ஒருமுறை கேட்டபோது “அத்தஹிய்யாத்” தில் “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம் மதின் எனத்தொடங்கி இன்னக்க ஹமீதும் மஜீத்” என முடிய நாம் ஓதும் ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். நாமாக எந்த ஸலவாத் தையும் உருவாக்கி ஓதுவதற்கு அனுமதியில்லை. அதற்கு நபிமொழி யில் எந்த ஆதாரமுமு் இல்லை.
ஸலாத்துல் கவ்ஃப்
صلاة الخوف
அச்சம் மிகுந்த நேரத்தில் சுருக்கித் தொழுவதற்கு ‘ஸலாத்துல் கவ்ஃப்’ என்று சொல்லப்படும்.
ஸலாத்துல் லைல்
صلاة الليل
இரவுத்தொழுகை என்பது பொருளாகும்.கியாமுல்லைல் தொழுகை, தராவீஹ் தொழுகை, வித்ருத் தொழுகை போன்ற தொழுகைகளுக்கு “இரவுத்தொழுகை” எனப்படும்.
ஸலாத்துல் ஜும்ஆ
صلاة الجمعة
வாரந்தோறும் மக்கள் கூடி லுஹருடைய வேளையில் லுஹருக்குப் பதிலாக நடத்தப்படும் தொழுகைக்கு ஜும்ஆத் தொழுகை எனப்படும். இத்தொழுகைக்கு முன்னர் இமாம் மிமபரிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக இரு குத்பாக்கள் (சொற்பொழிவுகள்) நிகழ்த்துவார். சமுதாயத் திற்குத் தேவையான மார்க்க விசயங்கள், போதனைகள்,மார்க்கச் சட்டங்கள், அன்றாடம் எழும் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள் ஆகியவற்றை ஹம்து ஸலவாத்திற்குப் பின் மக்கள் புரிந்து கொள்ளும் அவர்களின் மொழிகளில் உரையாற்றுவார்.
ஸவ்மு
صوم
“நோன்பு” என்று கூறப்படும்.இதற்கு தடுத்துக்கொள்ளல், விலகியி ருத்தல் எனபது பொருளாகும்.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி உணவு, குடிபானம், உடலுறவு போன்றவற்றிலிருந்து தடுத்துக் கொண்டு இவற்றிலிருந்து விலகியிருத்தலாகும்.
நோன்பின் நேரம்: -
சுப்ஹுக்கு அதான் சொன்னது முதல் சூரியன் மறையும் வரையாகும்.
நோன்பின் சட்டம்: -
ரமலான் நோன்பானது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று என்பதால் புத்தி சுவாதீனமுள்ள, பருவமடைந்த, நோன்பு நோற்பதற்கு முடியுமான ஆண்-பெண் அனைவர் மீதும் கடமையாகும்.
ஸஜ்தா
سجدة
“ஸுஜூது” என்பது சிர வணக்கம். ” தொழுகையில் நெற்றி,மூக்கு, இரு உள்ளங்கைகள்,இரு முட்டுக்கால்கள்,இரு கால்களின் விரல்கள் ஆகிய உறுப்புகள் தரையில் படும்படி செய்யப்படும் வணக்கத்திற்கு ஸுஜூது (சிரவணக்கம்) எனப்படும்.இது இறைவனுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். மனிதர்களுக்கோ, இறைவனின் பிறபடைப்பு களுக்கோ செய்வது கூடாது. ஷிர்க் ஆகும்.
ஸஹர்
سحر
1.அதிகாலை முன்னேரம். 2. இரவின் பிற்பகுதியில் வைகறைக்குச் சற்று முன்னர் நோன்பு நோன்பதற்காக உண்ணும் நேரம், அந்த நேரத்தில் உண்ணுவது, உண்ணும் உணவு ஆகியவற்றுக்கு “ஸஹர்” எனப்படும். அதுபோல இரவின் பிற்பகுதியல் எழுந்து தொழுவதற்கும் அச்சொல் ஆளப்பட்டுள்ளது.(3:17)
ஸஹர் உணவு
நீங்கள் ஸஹர் செய்யுங்கள். ஏனெனில் அந்நேரத்தில் பரக்கத் உள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)
ஸஹர் உணவை தாமதப்படுத்தி, நோன்பு திறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் இருக்கிறார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அஹ்மத்)
ஸஹர் செய்யும் விசயத்தில் நம் நாடுகளில் சில தவறுகள் நிகழ்கின்றன.
உதாரணமாக, மூன்று மணிக்கே சாப்பிட்டு விட்டு சுப்ஹுத் தொழுகை கூட இல்லாமல் தூங்கி விடுகின்றனர். இது உண்மையில் மேலுள்ள சுன்னாவை விடுவதால் ஏற்படும் தவறாகும். ஏனென்றால் சுப்ஹுக்கு அதான் கூறப்படும் வரை உண்ணலாம் பருகலாம்.அதே போல் நோன்பு திறப்பதற்கு 10 நிமிடங்கள் தாமதிப்பதும் சுன்னாவுக்கு முரணனதாகும்.
ஸஹீஹ்
صحيح
உண்மையானது, சரியானது என்பது இதன் சொற்பொருள். ஸஹீஹ் ஆதாரபூர்வமான வரிசையில் முதல் நிலையில் உள்ளது.
உறுதியான நினைவாற்றலும், நம்பகத்தன்மையும் மிகுந்த அறிவிப் பாளர்களால் அறிவிக்கப்பட்ட நபிமொழிக்கே “ஸஹீஹ்” என்பர். இதற்கு மாற்றமான அறிவிப்பாளர் களால் அறிவிக்கப் பட்டிருந்தால் அது “பலவீனமான ஹதீஸ்” (ளயீஃப்) ஆகும. ஆயினும் ஒரு நபந்தனை விதிக்கப்படுகிறது. அந்த அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ, அவரிடமி ருந்து அந்த ஹதீஸைக் கேட்டிருக்கவேணடும். இத்தகைய ஹதீஸ் களை உள்ளடக்கிய திரட்டுக்கும், ஸஹீஹ்” எனபர். (உ-ம்) ஸஹீஹல் புகாரி. (இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தொகுத்த ஆதாரபூர்வமான நபிமொழித்திரட்டு)
ஸாபியீன்
صائبين
இறைதூதர்கள் அனுப்பப்படாத போதும், அல்லது இறைதூதர்கள் வழிகாட்டு நெறி சென்றடையாத போதும், நல்லோர்களாக வாழும் சமுதாயமே ஸாபியீன்கள்.
இவ்வுலகிற்கு ஒரே ஒரு கடவுள தான் இருக்கமுடியும். மனிதனால் உருவாக்கப் பட்டவை கடவுளாக இருக்க முடியாது என்பதை இறைதூதர் மூலமாக இல்லாமல், இறைவன் வழங்கிய அறிவைக் கொண்டே இவர்கள் உணர்ந்து கொளவார்கள்.
மேலும் அறிவுபூர்வமாக சிந்திக்கும் போது எவையெல்லாம் தனிமனிதனுக்கோ சமுதாயத்துக்கோ கேடு அவற்றிலிருந்து விலகி வாழ்வார்கள்.நல்லவை என தெரிபவற்றைக் கடைபிடிப்பார்கள்.
வணக்கவழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைதூதர்கள் வழியாகத்தான் அறிய முடியும். இதைத்தவிர மற்ற விஷயங் களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.றபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படுமுன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர்.நபி(ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கை யைக் கூறிய போத அவர்களையும் ஸாபியீன்கள் என்று குறிப்பிட்டனர். ( பார்க்க புகாரி:344)
யாரேனும் நபிகள் நாயகத்தின் மார்க்கத்தில் சேர்ந்தால் அவர் ஸாபியீன்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டார் எனவும் கூறியுள்ளனர். ( பார்க்க புகாரி:3522)
இன்றைக்கும் இறைதூதர்கள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம்.அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும். இல்லையெனில் மறுமையில் அவர்கள் குற்றவாளிகளே! (பார்க்க குர்ஆன்: 2:62,5:69,22:17 வசனங்கள்)
ஸாம்
سام
இவர் நூஹ் (அலை)அவர்களின் முக்களில் மூத்தவர். அறிவிற் சிறந்த இவரின் கிளையில் நபிமார்களும்,ஆன்றோர்களும், அறிஞர்களும், மன்னர்களும்,தலைவர்களும் தோன்றவேண்டுமென்று நூஹ்(அலை) அவர்கள் செய்த இறைஞ்சுதலுக்கேற்ப பெருமக்கள் பலர் இவரின் திருமக்களாகத் தோன்றினர்.
இவரின் வழித்தோன்றல்களே ஸெமஜட்டிக் இனத்தினர் என்றும் கூறப்படுகின்றன.
ஸாமிரி
سامري
நபி மூஸா (அலை) அவர்கள்,தூர்ஸீனா மலைக்குச் சென்ற போது, மக்களைபார்த்துக் கொளளுமாறு தமது சகோதரர் நபி ஹாரூனிடம் விட்டுசசென்றார்கள். அப்போது அவர்களின் சமூகத் தைச் சார்ந்த “ஸாமிரி” என்பவன் இஸ்ரவேலர்களின் நகைகளை உருக்கி ஒரு காளைச் சிற்பத்தை உருவாக்கினான்.7:148,20:87.2):85
மூஸா நபியவர்கள் மலைக்குச் சென்றதும் மக்களை வழிகெடுப் பதற்காக ஒரு காளைச்சிற்பத்தைச் செய்து இது தான் இறைவன் என்று நம்பச் செய்தான். 20:85,20:88.மூஸா நபியின் காலடி மண்ணைப் போட்டு காளைச்சிற்பத்தை சப்தமிடச்செய்தான்.(20:96)
ஸாரா
سارة
இது இறை து{தர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மூத்த துணைவி யார் ஆவார். இறைதூதர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் அன்னை.
ஸாவு
صاع
மதீனாவில் நடைமுறையில் ஈருந்து வந்த 2 கிலோ 135 கிராம் எடை கொண்ட அளவைக்குறிக்கும்.
ஸாலிஹ் (அலை)
صالح غليه السلام
ஸவூதி அரேபியாவிலுள்ள ” அல்ஹிஜர்” என்னும் இடத்தில் வாழ்ந்த இறைதூதர். ஆடம்பர வாழ்வில் திளைத்து,சிலை வழிபாட்டில் மூழ்கிக் கொண்டிருந்த தமூத் கூட்டத்தரை சீர்திருத்த அனுப்பப்பட்வர்களே ஸாலிஹ்(அலை) அவர்கள்.
ஸிஹ்ர்
سحر
“சூனியம்” என்பது பொருள். குர்ஆனில் இச்சொல் 8 இடங்களில் வருகின்றன. (பார்க்க:2:102,7:116,10:81,20: 58,71,73,21:3,26:49)
ஸீரத்
سيرة
“வரலாறு” என்பது சொற்பொருள். உண்மையான வரலாறுகளுக்கே இச்சொல் பயன்படுத்தப்படும். குறிப்பாக நபி(ஸல்) அவர்கள், நபித் தோழர்கள், சான்றோர்களின் பிறப்பு முதல், இறப்பு வரையுள்ள வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு “ஸீரத்” எனக்கூறுவர். ஸீரத் இப்னு இஸ்ஹாக், ஸீரத் இப்னு ஹிஷாம்,” ஸியரு அஃலாமிந் நுபலா” போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்.
ஸுப்ஹ்
صبح
ஸுப்ஹ், ளுஹ்ர், அஸ்ர், மஃரிப், இஷா( காலை,முஸ்லிம்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஐங்காலத் தொழுகைகளில் அதிகாலாயில் எழுந்ததும் தொழும் முதல் தொழுகையின் பெயர்.
ஸுன்னத்
سنة
நபிவழிக்கு இச்சொல் பயன்னடுத்தப்படுகிறது.மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் போது இச்சொல் ஸுன்னத்தான செயல் எனப்படும். இதைச்செய்தால் நன்மை கிடைக்கும் விட்டுவிட்டால் குற்றமில்லை.
ஸைத் (ரலி)
குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒரே நாகத்தோழரின பெயர் இவர் தான.(33:37) ஸைத் நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகன்.33:37. மனைவியை அவர் விவாகரத்துச் செய்து கொண்ட பின் நபி (ஸல்) அவர்கள் அவரை மணந்து கொண்டனர். 33:37. அவர் நபிகள் நாயகத்தின் அன்புக்குப் பாத்திரமானவர்.
ஷஹீத்
شهيد
இஸ்லாமியப் போரில் அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்தவர்.
ஷஹாதத்-1
شهادة
“ஷஹாதா” என்றால் பார்த்தல், சான்று பகர்தல் என்று பொருள். மார்க்கத் துறையில் இச்சொல் வணக்கத்திற்குரியோன் அல்லாஹ் ஒருவன் என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனுடைய திருத்தூதர் என்றும் சான்று பகர்வதாகற்காக கூறுப்படும் உறுதி மொழியான ” “லாயி லாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல் லாஹ்” என்னும் கலிமத்துஷ் ஷஹாதாவிற்கு ” ஷஹாதத்” எனப்படும். இஸ்லாத்தில் புதிதாக இணைபவருக்கு நாம் “ஷஹாதத்” சொல்லிக் கொடுப்பதும் இந்த பொருளில் தான்.
ஷஹாதத்-2
شهادة
இஸலாத்திற்காகப் போர் புரிந்து அதில் இறப்பெய்தி, “வணக்கத்திற குரியோன் அல்லாஹ் ஒருவனே “ என்பதை செயல் மூலம் காட்டிச் சான்று பகர்வதையும் குறிக்கும்.
ஷஹீத்
شهيد
இதன் பொருள் உயி்ர்த் தியாகி என்பதாகும். மார்க்கத்திற்காக உயிர் தியாகம் செய்பவர், ஷஹீத் (தியாகி,சான்று பகர்கிறவர்”) என்று பெயர் பெறுகிறார். தியாகிகளின் அடக்க விடத் திற்கு “மஷ்ஹத்” என்று பெயர்.
அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்த தியாகிகள் முதல் தரத்தைச் சார்ந்த வர்கள்.
அவர்களை அடுத்து, “ஷஹீது” டைய பேறு பெற்றோர் என சிலரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பட்டுள்ளனர். அவர்கள்:-
1.நீரில் மூழ்கி மடிவோர், 2.தீயில் வெந்து இறப்போர்,3. சுவர் இடிந்து சாவோர்,4. தொத்து நோய்களுக்குப் பலியாவோர்,5.வெளியூர்களில் ஆதரவற்ற நிலையில் இறப்போர், 6.பிள்ளைப் பேறின் போது இறக்கும் பெண்கள்.
ஷாஹித்
شاهد
சாட்சி கூறுபவர்.
ஷுஐப் (அலை)
شعيب عليه السلام
ஓபா.நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் வந்த ஓர் இறைதூதர் அவர்கள் வடமேற்கு ஸவூதி அரேபியாவிலுள்ள மலைப்பிரமதுசமான “மத்யன்” (மித்யான்) பகுதிக்கு இறைதுஜதராக நியமிக்கப்பட்டார்கள். ஓரிறைக் கோட்பாட்டையும்,நேர்மையான வணிகத்தையும் வலியுறுத்தித் தம் மக்களிடையே திவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
தபூக்கிலிருந்து சிரியா செல்லும் பாட்டையில் “மதாயின் ஷுஐப்”(ஷுஐப் நகரங்கள் உள்ளன. “அஸ்ஹாபு மத்யன் ” மத்யன் வாசிகள் வாழ்ந்த இடங்களையும்,அழிந்த தடயங்களையும் இன்றும் காணலாம்.
ஷுஹதாஃ
شهداء
ஷஹீத் என்பதன் பன்மை ஷுஹதா என்பதாகும். பத்ர் போரில் வீர மரணம் அடைந்தோருக்கு ஷுஹதாவு பத்ர் (பத்ருத் தியாகிகள்) என்றும், உஹுதில் வீரமமரணமடைந்தோருக்கு, ஷுஹதாவு உஹுத் (உஹுத் தியாகிகள்) என்றும் கூறுகிறோம்.
ஹதஸ்
حدث
சிறுதுடக்கு. சிறுநீர்,மலம்,வாயு,பாலுணர்வுக் கிளர்ச்சி நீர்(மதி), ஆகியவை வெளியேறுவதற்கே ஹதஸ்( சிறுதுடக்கு) எனப்படும். ஏற்கெனவே அங்கத் தூய்மை (உளு) செய்திருந்த ஒருவருக்கு சிறு துடக்கு ஏற்பட்டால் அவருக்குத் தூய்மை நீங்கிவிடும். அவர் மீண்டும் உளு (அங்கத்தூய்மை) செய்து கொள்ள வேண்டும்.
ஹர்பு
حرب
போர். இஸ்லாமியப் போர்களுக்கு இச்சொல் வழங்கப்படுகிறது.
ஹரம்
حرم
1.அபயமளிக்கும் புனித பூமி.புனித கஅபாவை சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஹரம் எனப்படும்.மக்காவும் மதீனாவும் அபயமளிக்கும் பனித பூமிகள் என்று .ஸலாம கூறுகிறது.இங்கு போர் புரியக்கூடாது.எந்த உயிரினத்திற்கும் சிறிதும் தீங்கு செய்யக்கூடாது. அந்தப் பகுதியிலுள்ள புற்பூண்டுகளைக்கூட பிடுங்கக் கூடாது.
2. மஸ்ஜிதுல் ஹராம். திருமக்காவிலுள்ள இறையில்லமான புனித கஃபாவைச்சுற்றியுள்ள பள்ளிவாசல்.இதையும் மக்கள் “ஹரம்” என்றே கூறுகின்றனர்.
ஹராம்-1
حرام
2.புனிதம் வாயந்தது. கண்ணியப்படுத்தப்படவேண்டியது முஹர்ரம் மாதத்தை “அஷ்ஹருல் ஹராம்” (புனித மாதம்) என்றும், மக்கா நகரை “அல்பலதுல் ஹராம்” (புனித நகர்) என்றும், கஃபாவை உள்ளடக்கிய பள்ளிவாசலை “அல- மஸ்ஜிதுல் ஹராம்” புனிதப் பள்ளி வாசல் என்றும் கூறப்படுகிறது.
ஹராம்-2
حرام
திருக்குர்ஆனாலும், நபி(ஸல்) அவர்களாலும் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டதற்கு “ஹராம்” எனப்படும். உ-ம். தானாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம்,அல்லாஹ்வின் பெயர் கூறப்படாது அறுக்கப்பட்ட பிராணிகள் போன்றவை தடுக்கப்பட்டவற்றைச் சார்ந்ததாகும். (பார்க்க: 2:173,3:50, 5:96,6:119,16:115)
ஹலால்-1
حلال
அனுமதிக்கப்பட்டது என்று பொருள். திருக்குர்ஆனாலும், நபி(ஸல்) அவர்களாலும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டதற்கு “ஹலால்” எனப்படும்.
ஹலால்-2
حلال
புனித ஹஜ்ஜின் போது இஹ்ராம் உடையைக் களைந்து இயல்பான நிலைக்குத் திரும்புவதற்கும் ” ஹலால்” என்ற சொல் ஆளப்படுவ துண்டு. (பார்க்க ஹராம்)
ஹவ்வா
حواء
ஏவாள். ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் துணைவியாவார். மனித குலத்தின் தாயார்.
ஹஜ்
حج
கஅபாவை தரிசிப்பதும் மற்றுமுள்ள செயல்களும். இது உடல் ஆரோக்கியமும், பொருள் வசதியுமுள்ள முஸ்லிம்களுக்கு வாழ்க்கையில் ஒரு முறை கடமையாகும். ஹஜ்ஜு மூன்று வகை களாக நிறைவேற்றலாம். 1. இஃப்ராத். இது ஹஜ்ஜுக்கு மட்டும் நிய்யத் வைத்து நிறைவேற்றுவது.2.கிரான். இது ஹஜ்ஜையும், உம்ராவை யும் சேர்த்து நிய்யத் வைத்து நிறைவேற்றவது. 3.தமத்துஃ. இது முதலில் உம்ராவை நிறைவேற்றிவிட்டுவிட்டு, அதிலிருந்து விடு பட்டு (தஹல்லுல் ஆகி, மீண்டும் ஹஜ்ஜுக்காக துல்ஹஜ் 8-வது நாள் நிய்யத் வைத்து நிறைவேற்றும் வணக்கமாகும். (பார்க்க : “ஹஜ்ஜுக் கடமைகள்”)
ஹதீஸ்
حديث
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திற்கு கூ2ப்படும்.(பார்க்க : நபிமொழிக் கட்டுரைகள்)
ஹய்
حي
ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு “ஹய்” நகர் என்று கூறப்படும். (உ-ம்) ஹய் யாகூத், ஹய் அந்நவா, ஹய் அல் உயூன் என்பதாகும். ஒரு மாவட்டத்தைக் குறிப்பிடுவதற்கும் “ஹய்” என்று கூறுவதுண்டு. (உ-ம்:ஹய் அஸ்ஸலாமா, ஹய் குரைஷீ , ஹய் அஷ்ஷரஃபிய்யா).
ஹய்ய
حي
ஹய்ய என்றால் “விரைந்து வாருங்கள்” என்று பொருள். தொழுகைக் காக நாள் தோறும் ஐந்து முறைகள விடுக்கப்படும் அதானில் “ஹய்ய அலஸ்ஸலாத்” தொழுகைக்கு விரைந்து வாருங்கள். “ஹய்ய அலல் ஃபலாஹ்” “வெற்றியின் பால் விரைந்து வாருங்கள்” என்று கூறுவதில் வரும் ஹ்ய்ய என்ற சொல் உலகெல்லாம் ஒலிப்பதைக் காணலாம்.
ஹர்ரா
حرة
‘ஹர்ரா’ என்றால் விவசாயக் களம்.அங்குதான் மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் தங்களது அறுவடைகளைக் காய வைப்பார்கள்.
ஹஜருல் அஸ்வத்
حجر الأسود
‘ஹஜருல் அஸ்வத்’ என்பது ஒரு கறுப்புக் கல். இது சொர்க்கத்திலுள்ள கல்லாகும். இந்த கல்லுக்கு வேறு எந்த மக்கியத்துவமுமில்லை. உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தியிராவிட்டால் நானும் உன்னை முத்திமிடடிருக்க மாட்டேன்”
ஹாம்
حام
ஒரு ஆண் ஒட்டகம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண் ஒட்டகங்களைக் கருவுறச் செய்தால் அந்த ஆண் ஒட்டகத்தை தமது தெய்வங்களுக்கென விட்டு விடுவார்கள். இதை ‘ஹாம்’ (حام) எனக் குறிப்பிடுவர். இவர்களின் இந்தக் கற்பனையான செயல்களையும், மூடப்பழக்கங்களையும் இவ்வசனம் (5:103) கண்டிக்கிறது. (148)
مَا جَعَلَ اللّهُ مِن بَحِيرَةٍ وَلاَ سَآئِبَةٍ وَلاَ وَصِيلَةٍ وَلاَ حَامٍ وَلَـكِنَّ الَّذِينَ كَفَرُواْ يَفْتَرُونَ عَلَى اللّهِ الْكَذِبَ وَأَكْثَرُهُمْ لاَ يَعْقِلُونَ
‘பஹீரா’ (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ‘ஸாயிபா’ (சுயேட்சை யாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்),’வஸீலா’ (இரட்டைக் குட்டி களை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்),’ஹாமி’(வேலையெதுவும் வாங்கப்படாமல் சுயேட்சையாகத் திரியும்படி விடப்படும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.-ஆனால் காபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர்.மேலும் அவர்களில் பெரும்பாலும் நல்வறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர். (அல் மாயிதா 5:103)
ஹிகாயத்
حكاية
கதை, செய்தி.
ஹிரக்ல் (ஹெராக்ளியஸ்)
هرقل
ஹிரக்ல் (Heraclius-610-641 ) இது நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ரோமப் பைஸாந்தியப் பேரரசர் சிசரின் பெயர்.இவரோடு ரோமப் பேரரசு முடிவுக்கு வந்தது.
ஹிஜ்ரத்
هجرة
இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்ற முடியாத ஊரிலிருந்து வெளியேறி அதற்கு ஏற்றவாறான ஊரில் குடியேறுவது.(பார்க்க: ”ஹிஜ்ரத் ஒரு சகாப்தம்” கட்டுரை)
ஹிஜ்ரீ
هجري
இஸ்லாமிய ஆண்டுக் கணக்கிற்கு ஹிஜ்ரீ ஆண்டு எனப்படும். கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் தான் ஹஜ்ரீ ஆண்டுக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஹிஜாஸ்
حجاز
ஸவூதி அரேபியாவில் செங்கடலுக்கு அருகே வடக்கே “அகபா வளைகுடாவிலிருந்து தெற்கே அசீர் வரை பரந்து கிடக்கும் பகுதி.இந்த நிலப்பரப்பில் புனித மக்கா, தாயிஃப், தபூக் நகரங்கள் உள்ளன.ஒரு காலத்தில் புனித மக்கா நகரம் இதன் தலைநகராக விளங்கியது.
ஜனாஸா
جنازة
மரணித்தவரின் உடல்.ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக முஸ்லிமகள் ஜனாஸா தொழுகை நட்த்துவது ஃபர்ளு கிபாயாவாகும். ( பார்க்க: ஃபர்ளு கிஃபாயா)
ஸகாத்
زكوة
முஸ்லிம் செல்வந்தர்கள் மீது ஆண்டுக்கொரு முறை விதிக்கப்பட்ட மார்க்க வரி. 100 க்கு இரண்டரை சதவிகிதம் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.குர்ஆனில் 31 தடவைகள் கூறப்பட்டுள்ளன.(2: 43,83,110,177,277, 4:77,126,5:12,55, 9:5,11,18,71,18:81,19:13:31,55, 21:73,22:41,78,23:4,24:37,56,27:3,30:39, 31:4,33:33,41:7,58:13, 73:20, 98:5) (பார்க்க: இஸ்லாம் வழங்கும் ஸகாத்)
ஜபல்
جبل
மலை. ஜபலுந்நூர் (அந்நூர்- ஹிரா மலை), இது நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்பட்ட மலை. ஜபலுத் தவ்ரு. (தவ்ரு மலை) இதில் தான் நபி (ஸல்) அவர்களும் , அவர்களின் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத்தின் போது தப்புவதற்காக எதிரிகளின் கண்களில் படாமல் மறைக்திருந்த இடம். ஜபலுர் ரஹ்மத் (அரஃபாத் மலை) இந்த இடத்தில் நின்று காண்டு தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ஹஜ்ஜத்துல் வதாஃ (இறுதி உரை) நிகழ்த்தினார்கள்.
ஜாலூத்
جالوت
2:2249,2:251
ஜின்
الجن
“ஜின்கள்” என்பவை மனிதக் கண்களுக்குப் புலப்படாத, இறைவனின் ஒரு படைப்பு.ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள். அல்-ஜின் என்ற பெயரில் குர்ஆனில் 72-வது அத்தியாமாக ஒரு அத்தியாயமும் உள்ளது.அதில முதல் வசனத்தில் ஜின் என்ற படைப்பைப்ற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு “ஜின்” என்று பெயர் வழங்கப்படுகிறது. (பார்க்க:அல்ஜின் அத்தியாயம்)
ஜிஸ்யா
جزية
காப்பு வரி.இஸலாமிய அரசின் கீழ் அதன் பாதுகாப்பைப் பெற்று முஸ்லிமல்லாத குடீமக்களுக்கு முஸ்லிம்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருந்தன.இந்த குடிமக்கள் போரில் கலந்து கொள்வதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தனர்.இந்த விதி விலக்கு அவர்கள் பாதுகாப்பாக வாழவும், வளரவும், வாணிபம் செய்யவும்,அவர்களின் வணக்கவழிபாடுகளைச் செய்யவும் வழி வகுத்தது. இந்த நியாயமான காரணங்களை முன்னிட்டு அவர்களிட மிருந்து மிகக்குறைந்த விகிதத்தில் வரி ஒன்று வசூலிக்கப்பட்டது. அதுவே “ஜிஸ்யா” காப்பு வரி எனப்படும்.
இந்த வரியிலிருந்து பெண்களும்,சிறுவர்களும், ஏழைகளும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தனர்.இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்த முஸ்லிம் அல்லாத அரசுகள் கூட இஸ்லாமியப் பேரரசு்கு இந்த வரியைக் கப்பமாகக் கட்டிவந்தன. நபி(ஸல்)அவர்களின் காலத்தில் குறைந்த அளவாக வருடத்திற்கு 10 திர்ஹங்கள் நிர்ணயிக்கப் பட்டிருந்தன.
( குறிப்பு: மேலே கண்ட சொற்களில் இன்னும் அதிகமான சொற்கள் சேர்க்கபட்டு விரிவாகவும் விளக்கமாகவும் தொடர்ந்து வரும்)
இவற்றையும் மற்ற பதிவுகளையும் எங்கள் அனுமதியின்றி ஏனைய இணைய தளங்களில் பதிவு செய்ய அனுமதியில்லை என்பதைத் தெரிவிததக் கெள்கிறோம்.ஆசிரியர்.
Leave a Reply
You must be logged in to post a comment.