அறிமுகம்
December 13th, 2006 by Ahmad Baqavi
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
وَقُلْ جَاء الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقً
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சத்தியம் வந்துவிட்டது!அசத்தியம் அழிந்து விட்டது!அசத்தியம் அழிந்தே தீரும். (அல்-குர்ஆன்17:81)
ஹம்தன் லில்லாஹ்! ஸலாத்தன் வஸலாமன் அலா ரசூலில்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
வல்லான் அல்லாஹ்வின் வளமார் அருளால்,
என் இனிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
உங்கள் அனைவருக்கும் ஹஜ்ரி 1426வது ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என் நீண்டநாள் ஆசை இன்று நிறைவேறுவதை எண்ணி வல்லான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன். அல்ஹம்துலில்லாஹ்!
1958 வது ஆண்டு, இஸ்லாமிக் கல்லூரியில் காலூன்றிய ஆண்டு ! அன்று முதல் இன்று வரை கடந்த 46 ஆண்டு காலமாக நான் பெற்ற இஸ்லாமியக் கல்வியையும் வாழ்க்கை அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டிலா மகிழ்ச்சியடைகிறேன்.
நாளிதழ்,வார இதழ்,மாத இதழ் என பல்வேறு இதழ்கள் பல்வேறு காலங்களாக உலா வந்தாலும் இன்று உலகில் கணப்பொழுதில் சென்றடையும் இன்டெர் நெட் தளங்கள் மக்களை ஈர்த்து ஆட்கொண்டிருக்கும் அதிசயத்தைக் காணுகிறோம்.
எனவே நவீனஉலகின் அசுர வேகத்தில் நாமும் சென்று நமது பங்காக ஒரு இணைய தளத்தின் வாயிலாக இஸ்லாமிய அறிவு ஞானங்களை அதன் தூய வடிவில் மக்களுக்கு வழங்கலாம் என எழுந்ததே அல்-பாக்கவி இணைய தளம்.
இதில் குர்ஆன் (அருள் மறை) , ஹதீஸ் (நபிமொழிகள்),ஃபிக்ஹு (மார்க்கச் சட்டங்கள்), தாரீக் (வரலாறு), பொது அறிவு , பல்சுவை போன்ற பல தலைப்புகளில் உங்களின் இஸ்லாமிய வாழ்வுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் உங்களுக்குத்தர விழைகிறோம்.
இஸ்லாமிய அறிவுக்களஞ்சியம்
சுருக்கமாக இது ஓர் இஸ்லாமிய அறிவுக்களஞ்சியமாக உங்களிடம் உலா வரும் என்பதில் ஐயமில்லை. அதற்குத் துணை புரிய வல்ல ரஹ்மானை வேண்டுகிறேன்.
இதில் குறை காண்போர் ஆதாரத்துடன் எங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தால் பரிசீலனை செய்து மகிழ்வுடன் திருத்திக் கொள்கிறோம்.
அன்புடன்,
டாக்டர் அஹ்மத் பாக்கவி, பி.எச்.டி
9 Responses to “அறிமுகம்”
Leave a Reply
You must be logged in to post a comment.
Assalamu Alaikum (Varh)..
Alhamdulillah..
Your Site is Very Useful To All
Assalamu Alaikum,
A graet service to Tamil Muslim Community to counter the fitnas and confusions in the name of tawheed.
My best wishes to suceed in your efforts in the path of Allah.
Wassalam
Assalamu Alaikum
Very informative
Muduvai Hidayath
Camp : Dubai
E mail : muduvaihidayath@gmail.com
Contact No. 00971 50 5196433
அஸ்ஸலாமு அலைக்கும்.
அறிவுபூர்வமான நிறையத் தகவல்கள் தந்துள்ளீர்கள்.
இன்றைய கால கட்டத்தின் மாற்றங்களும், மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் உகந்த இன்னும் பல கட்டுரைகளை உங்கள் தளத்தின்மூலம் எதிர்பார்க்கிறோம் இன்ஷா அல்லாஹ்…
உங்களது முயற்சிகளுக்கு எங்களது பாராட்டுக்கள்; வல்ல றஹ்மான் உங்களுக்கு அதற்குரிய நற்கூலியையும், நல்லருளையும் வாரி, வாரி வழங்க துஆச் செய்கிறோம்.
அன்புடன்,
தாருல்ஸஃபா சாதிக்.
Assalamualaikum,
It’s really a good start, keep it up!
Wassalam
KL,Malaysia
Assalamu alaikum !
The web site is informative.
I pray unto Almighty Allah to shower His Blessings,and make this site popular.
Aameen!
-Ameenur Rahman,
Assistant Executive engineer,
Town Panchayats,
Collectorate,
Vellore 632 009
Assalamu Alaikkum ungal adress tel no vendume
by m a karreem
imam kalpalli vasal
this kind educational programme will helpful to the students as well as to adults futher it will expand knowledge of every person for better life
beside that if you start Quranic Arabic classes that will bring success for ever please try you best to bring such a splendid work on behalf of Almighty Allah
well done.