Feed on
Posts
Comments

ஹஜ்ஜிலே கேட்கப்பட்ட சில கேள்விகள் ?

1. மஃரிப் தொழுகைக்கு முன்னர் சுன்னத் தொழுலாமா ?

ஹஜ்ஜுக்கு வந்தவர்களில் சிலர் இங்கே மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுகிறார்களே? நமதூரில் தொழுவதில்லையே ? இதை இந்த வஹ்ஹாபிகள் தாமாகச் சோத்துக் கொண்டு புதுமையாகச் செய்கிறார்களே! இது இவர்களின் கைவரிசை என்று ஒரு சகோதரர்  இவர்கள் மீது ஒரு பழியைச் சுமத்திவிட்டு இதற்கு ஹதீஸில் ஆதாரமிருக்கிறதா? என்று வேகமாகவும் வியப்பாகவும் கேட்டார்.

ஆம்! ஆதாரமிருக்கிறதே என்றோம். எங்கே? காட்டுங்கள் பார்க்கலாம் என்று சற்று ஏளனத் தொனியோடு கேட்டார் அந்த முதுகலைப் பட்டதாரியும் சட்டப்படிப்பு படித்தவருமான வழக்குரைஞரான அந்த சகோதரர். மேலும்.. »

இன்று மக்காவை நோக்கி

சவூதி அரேபியாவிலிருந்தும் ஏன் ஏனைய அரபுநாடுகளிலிருந்தும் நாளை மினாவிலே கூடுவதற்காக கார்களிலும், பேருந்துகளிலும் சென்றவண்ணமுள்ளனர்.

உலக நாடுகளிலிருந்து ஹஜ்ஜிக்காக வந்து மக்காவிலே தங்கியுள்ள வர்கள் இன்றிரவே மினாவை நோக்கி பயணம் செய்ய தயாராக உள்ளனர். மதீனாவிலே வந்து சேர்ந்தவர்கள் நேற்றிலிருந்து மக்கா வந்து மக்காவிற்கருகிலே உள்ள அஸீஸியாவிலே தங்கியுள்ளனர்.

இன்று 50 சதவிகிதத்தினர் தவாப், ஸயீ போன்ற வணக்கங்களை முடித்துக் கொண்டு மினாவைப் போய் சேர்ந்துவிடுவர். ஏனையோர் நாளை அதிகாலையிலிருந்து மினாவில் வந்து குவிந்து விடுவர். மேலும்.. »

உள்ஹிய்யா (மிருகபலி)

உள்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.

கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் – புகாரி மேலும்.. »

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெறுவோமாக!

சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி மேலும்.. »

ஹஜ்ஜு பற்றி வரும் 22 மறை வசனங்கள்

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَآئِرِ اللّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا وَمَن تَطَوَّعَ خَيْراً فَإِنَّ اللّهَ شَاكِرٌ عَلِيمٌ{158}


(2:158)) நிச்சயமாக ‘ஸஃபா’இ’மர்வா’ (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல. இன்னும் எவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும் (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். மேலும்.. »