Feed on
Posts
Comments

அஸ்ஹாபுஸ்ஸுஃப்ஃபா

மஸ்ஜிதுந்நபவீயின் வடக்குப்பகுதியில் ஒரு திணணை இருந்தது.அதன் மீது ஈச்சந்தட்டியால் ஒரு பந்தல் போடப்பட்டி ருந்தது.அதில் ஏழை அகதிகள் தங்கி வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை 10,30,70,92,93,400 என்று பலவிதமாகக் கூறப்படுகிறது.

அஸ்ஹாபுஸ்ஸுஃப்ஃபாவில் 70 பேர்களை ப் பார்த்ததாக ஆபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி) இவர்களல்லாத 70 பேர்கள் பீர் மவூனாவுக்குப் பிரச்சாரத்திற்காக அனுப்பப்பட்டார்கள். இவர்கள் பின்னர் அங்கே படு கொலை செய்யப்பட்டார்கள். மேலும்.. »

இன்ஷா அல்லாஹ்!
இதன் பொருள் ” அல்லாஹ் நாடினால்” என்பதாகும். இதைச்சொல்வது குறித்து குர்ஆனில் 18:23,24. 2:70,12:99,18:69,28:27,37:102,48:27 ஆகிய ஏழு இடங்களில் வருகின்றன.

மக்கா குரைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்டு திணற வைத்தனர். அவர்களுடைய மார்க்கத்தை போலி மார்க்க மாக சதி சூழ்ந்து யத்ரிபிலுள்ள யூத ரப்பிகளிடம் ஆலோசனை கலந்து நபி(ஸல்)அவர்களை அணுகி குகைவாசிகள்பற்றி வினவினர்.

நபி (ஸல்) அவர்களோ ” இன்ஷா அல்லாஹ்” என்று கூறாது “நாளை இதற்கு பதில் கூறுகிறேன்” என்று மறுமொழி பகர்ந்தனர். இவ்வாறு அவர்கள் “இன்ஷா அல்லாஹ்” என்று கூறாதன் காரணமாக இறைவனி டமிருந்து அவர்களுக்கு இரண்டு வார காலமாக வஹீ வருவது நின்று விட்டது. மேலும்.. »

புகழ்மிகு தஃ.ப்ஸர்களும், தஃப்ஸீர் கலை மேதைகளும்
1. திருக்குர்ஆனின் முதற்பெரும் விரிவுரையாளர் அண்ணல் நபி (ஸல்) அவர்களேயாவார்.
2. அவர்களுக்குப்பின் ஸஹாபாக்களில் குர்ஆனுக்குத்  தப்ஸீர்-விரிவுரை செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் :
1. நாயகத் தோழர்கள்
01. அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா (ரலி)
02. உமர் இப்னுல் கத்தாப் (ரலி)
03. உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)
04. அலி இப்னு அபீ தாலிப் (ரலி) மேலும்.. »

தஃப்ஸீர்
“தப்ஸீர்” என்னும் சொல் ஃபஸ்ஸர, விளக்கினான் தெளிவு படுத்தினான் என்னும் வினைச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். “தஃப்ஸீர்” என்னும் சொல்லுக்கு “விளக்கம், தெளிவு” என்னும் பொருளில் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَاكَ بِالْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيراً

(முஹம்மதே!)அவர்கள் எந்த உதாணத்தைக் கூறியபோதினும் (அதைவிட) உண்மையா னதையும்,அழகிய விளக்கத்தையும் நாம் உமம்மிடம் கொண்டு வருவோம்.(அல்புர்கான் : 25:33)
இங்கே “அழகிய விளக்கம்” எனக்குறிப்பிட ” َأَحْسَنَ تَفْسِيرا ” “அஹ்ஸனு தஃப்ஸீரா” என்னும் சொல் இங்கு ஆளப்பட்டிருக்கிறது. மேலும்.. »

நஷ்டவாளர்கள் யார்?

இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்தவர்கள்  யார் என்பது பற்றி குர்ஆனில் 60-க்கு மேற்பட்ட இடங்களில் கூறப்படுகின்றன.

1. ஸூரத்துல் பகரா (பசு மாடு)

2:27 இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள். இவர்களே தாம் நஷ்டவாளிகள். மேலும்.. »