May 17th, 2010 by Ahmad Baqavi
ஸாபியீன்என்றால் யார்?
இறைதூதர்கள் அனுப்பப்படாத போதும், அல்லது இறைதூதர்கள் வழிகாட்டு நெறி சென்றடையாத போதும், நல்லோர்களாக வாழும் சமுதாயமே ஸாபியீன்கள்.
இவ்வுலகிற்கு ஒரே ஒரு கடவுள தான் இருக்கமுடியும். மனிதனால் உருவாக்கப் பட்டவை கடவுளாக இருக்க முடியாது என்பதை இறைதூதர் மூலமாக இல்லாமல், இறைவன் வழங்கிய அறிவைக் கொண்டே இவர்கள் உணர்ந்து கொளவார்கள். மேலும்.. »
Posted in Uncategorized | No Comments »
May 8th, 2010 by Ahmad Baqavi
(ந முதல் ஹ வரை. எழுத்தின் வரிசை :ந, வ,ள,ஜ,ஸ,ஷ,ஹ)
நஃபில்
نفل
உபரியானது. உபரியான வணக்கங்களுக்கும் (தொழுகைகளுக்கும்) இச்சொல் பயன்படுத் தப்படுகிறது.
வஸீலா (வாவு,ஸீன் எழுத்து)
وسيلة
உதவி தெடுதல் என்பது பொருளாகும். இறைவனிடம் தொழுகையின் மூலமாககவும் பொறுமையோடிருந்தும் உதவி தேடுங்கள். ( குர்ஆன்: 5:35) நபிமார்கள், அவ்லியாக்கள், இறந்து போன பெரியார்கள் மூலமாக வஸீலா என்ற பெயரில் வேண்டுவதற்கோ, உதவி தேடுவதற்கோ குர்ஆனிலோ, ஹதீஸிலோ எவ்வித ஆதார முமில்லை. மேலும்.. »
Posted in கலைச் சொற்கள், தஃவா வகுப்பு | No Comments »
May 8th, 2010 by Ahmad Baqavi
மு முதல் நு வரை
முஸ்லிம்
مسلم
அல்லாஹ்விற்கும் அவனது மார்க்கத்திற்கு மட்டும் கட்டுப்பட்டவர்.
முஸ்ஹஃப்
مصحف
ஏடு. குர்ஆனுக்கு வழங்கப்படும் மற்றொரு பெயர்.
முஃமின்
مؤمن
அல்லாஹ்வையும் அவன் கூறிய அனைத்தையும் முழுமையாக நம்பிக்கை கொண்டவர்.
முஃபஸ்ஸிர்
مفسر
குர்ஆனையும்,ஹதீஸையும் கற்றுத்தேறி குர்னுக்கு விரிவுரை செய்வோர். மேலும்.. »
Posted in கலைச் சொற்கள், தஃவா வகுப்பு | Comments Off
May 7th, 2010 by Ahmad Baqavi
(ச முதல் மீ வரை: அகர வரிசை: ச,சா,த,தா,தி,தீ,து,தூ, தை, ந,ப,பா,பி,பீ,பு,பூ,பை,ம,மா,மி,மீ,மு.மூ,மை)
சாயிபா
سائبة
அரபுகள் நேர்ச்சைக்காக சில ஒட்டகங்களை தங்கள் தெய்வங்க ளுக்காக விட்டுவிடுவார்கள். அவற்றில் யாரும் ஏறிச் செல்வது கூடாது. என்றும் முடிவு செய்திருந்தனர். இத்தகையை ஒட்டகங்களை ‘சாயிபா’ (سائبة ) எனக்குறிப்பிடுவர். (பார்க்க : 5:103)
தக்பீர்
تكبير
‘அல்லாஹு அக்பர்’ அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறுவதற்கு “தக்பீர்” எனப்படும்.அதானிலும்,தொழுகையிலும், பெருநாட்களிலும் இந்த தக்பீர் முழக்கங்களை தொடர்ந்து நீங்கள் கேட்கலாம்.
தஃப்ஸீர்
تفسير
குர்ஆன் விரிவுரை.குர்ஆன் விரிவுரை நூற்களுக்கும் தஃப்ஸீர் எனப்படும்.உலகில் இது வரை இரண்டு இலட்சம் தஃப்ஸீர்கள் வந்துள்ளன.குர்ஆனின் முதல் குர்அனின் முதல் விரிவுரையாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.உலகின் புகழ்பெற்ற தஃப்ஸீர் இப்னு ஜரீர் அத்தபரீ எழுதிய “தஃப்ஸீர் தபரீ” ஆகும். மேலும்.. »
Posted in கலைச் சொற்கள், தஃவா வகுப்பு | No Comments »
May 4th, 2010 by Ahmad Baqavi
தொகுதி 2. (உ முதல் கை வரை) எழுத்து வரிசை: உ,ஊ,எ,ஏ,க,கா,கி,கீ,கு,கூ,கை)
உம்ரா
عمرة
நாடுதல்,சந்தித்தல்,வழிபடுதல் என்பன பொருளாகும்.”லப்பைக்க உம்ரத்தன்” உம்ராவுக்காக நிய்யத் வைத்து கஅபாவை 7 தடவைகள் இடப்பக்கமாக (தவாஃப்) வலம் வந்து 7 தடவைகள் ஸஃபாவி லிருந்து மர்வா வரை ,அது போல மர்வாவிலிருந்து ஸஃபா வரை ஸஈ செய்து நிறைவு செய்யும் ஒரு வகை வணக்க வழிபாடாகும். (2:196) ஹஜ்ஜு வழிபாட்டிற்கு குறிப்பிட்ட காலம் உண்டு. உம் ராவுக்கு கால நிர்ணயம் இல்லை. மேலும்.. »
Posted in கலைச் சொற்கள், தஃவா வகுப்பு | No Comments »