May 1st, 2010 by Ahmad Baqavi
இஸ்லாமிய கலைக் களஞ்சியம்
இஸ்லாமிய கலைக்களஞசியம் என்ற தலைப்பில் 35 ஆண்டு களுக்கு முன் 1967 முதல் 1975 வரை பல் வேறு இஸ்லாமியத் தலைப்புகளில் அறிஞர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்களுடன் துணை ஆசிரியராக இருந்து எழுதி வந்தேன். அவை 1976,1977, 1979 ஆண்டுகளில் மூன்று பாகங்களாக வெளி வந்தது இஸ்லாமிய வாசகர்களுக்கு நினைவி ருக்கும். அன்றைய சூழ்நிலையில் நமக்குக் கிடைத்த தகவல்களின் தொகுப்பாகவே அவை அமைந்தன. ஆதார பூர்வமான தகவல்கள் கிடைப்பது அன்று கடினமாக இருந்தது.
ஆதாரமற்ற பல செய்திகள் சேர்ந்திருப்பதை பின்னர் தெரிந்தபோது , இன்ஷா அல்லாஹ், காலம் கனியும் போது ஆதாரபூர்வமான பல தகவல்களைத் திரட்டி நாம் தனியாக ஒரு நூல் வெளியிட வேண்டு மென்று விரும்பினோம். அதன் துவக்கமே இப்பணி. மேலும்.. »
Posted in கலைச் சொற்கள், தஃவா வகுப்பு | No Comments »
April 27th, 2010 by Ahmad Baqavi
நேரம் ஒதுக்குங்கள்!
1. வாழ்க்கையில் நல்லதை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்.
இது வெற்றியின் இரகசியம்!
2. சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது ஆற்றலின் ஆணிவேர்!
3. படிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
இது மெய்யறிவின் அடித்தளம்! மேலும்.. »
Posted in தஃவா வகுப்பு, பொதுவானவை | No Comments »
April 26th, 2010 by Ahmad Baqavi
ஒரு மனிதனின் சராசரி ஆயுள்
ஒரு மனிதனின் சராசரி ஆயுளைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது கூறினார்கள்.
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عُمُرُ أُمَّتِى مِنْ سِتِّينَ سَنَةً إِلَى سَبْعِينَ سَنَةً
எனது சமுதாயத்தவரின் ஆயுள் காலம் அறுபதிலிருந்து எழுபது வரையாகும் ( அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ,நூல்: புகாரி-2501)
இன்று நமது ஆயுளில் இறைவணக்கத்திற்கு நாம் செலவிடும் காலம் எவ்வளவு? ஒரு ஆய்வுக்கணக்கு கூறுவதைக் கேளுங்கள். மேலும்.. »
Posted in தஃவா வகுப்பு, பொதுவானவை | No Comments »
April 26th, 2010 by Ahmad Baqavi
( 15.04.2010 அன்று ஜித்தாவில் டாக்டர் அஹ்மத் பாக்கவி ஆற்றிய உரையிலிருந்து )
வீணாகும் காலங்கள்
வீணாகும் காலங்கள் என எனக்குத் தலைப்பு தரப்பட்டுள்ளது.
அப்படியானால் நமது பொன்னான நேரங்கள் மண்ணாகின்றன, வீணாகின்றன என்று தானே பொருள்படுகிறது.
நேரத்தின் விலையை, மதிப்பை மாண்பை வெகுமதியை, அது நிகழ்த்தும் அதிசயத்தை மக்கள் புரிந்து கொள்ளாததால் தான் நேரத்தை வீண்விரயம் செய்கின்றனர்.
அதன் ஆழமான பொருளை, அது வலியுறுத்தும் உண்மையை, அதை இழப்பதால் ஏற்படும் பேரழிவை, அதனால் விளையும் ஆபத்துகளை மக்கள் அவசியம் புரிந்து கொள்ளவேண்டும். மக்களைப் புரிய வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வித்தியாசமான தலைப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது. மேலும்.. »
Posted in தஃவா வகுப்பு, பொதுவானவை | No Comments »
April 21st, 2010 by Ahmad Baqavi
முழுவதுமாக படிக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்

Posted in பொதுவானவை | No Comments »