Feed on
Posts
Comments

பெரும்பாவங்கள் الكبائر பெரும்பாவங்கள்

பாவங்கள் என்றால் என்ன? என்பதைப் புரியாமலே நம்மில் பலர் அதைச்செய்து குற்றவாளியாகின்றனர். எனவே பாவம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

பெருமானார் (ஸல்) அவர்களிடம் நன்மையைப்பற்றியும் தீமையைப்பற்றியும் வினவினேன். அதற்கவர்கள் “நல்லொழுக்கமே நன்மையெனப்படும்.பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்செரிப்பதும், அதைப்பிறரிடம் வெளியிடும் போது நீ வெறுப்பதுமாகும்.” என  விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸிற பின் ஸம்ஆன், நூல் முஸ்லிம்) மேலும்.. »

வணக்க வழிபாடுகளிலே போலித்தனம்!

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

يوشك زمان علي أمتي . لا يبقي من الاسلآم الا اسمه ولا يبقي من القرآن الا رسمه  مساجدهم عامرة وهي خراب من الهدي

என் சமுதயத்தவர் மீது ஒரு காலம் வரும். அப்போது அவர்களிடம் இஸ்லாமிய வாழ்க்கைமுறை எதுவும் இருக்காது. முஸ்லிம் என்ற பெயர் மட்டுமே எஞ்சியிருக்கும்.அழகிய வடிவில் குர்ஆன் வேதநூலாக கைகிலிருக்கும். ஆனால் குர்ஆனை பின்பற்றுவோர் அதன்வழி நடப்போர் எவருமிருக்கமாட்டார்கள். பள்ளிவாசல்கள் வானளாவ உயர்ந்து நிற்கும். அவை மக்களால் நிரம்பி வழியும். ஆனால் அங்கே தக்வாவும் நேர்வழியும் இருக்காது. மேலும்.. »

இஸ்லாமியப் பார்வையில் போலித்தனம்- (ريا) ரியா
(ஜித்தா பலதில் 26.02.2010ல் ஜித்தா ஸினாயிய்யா, இஸ்லாமிய தஃவா மையம் நடத்திய  மார்க்க விழாவில் டாக்டர் அஹ்மத் பாக்கவி ஆற்றிய உரையின் சுருக்கம்)

நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதலைப்பு.

மனிதனை வீழ்த்தும் ஒரு கொடிய நோய்! அதுமட்டுமல்ல, மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் மறைமுகமான நச்சுப்பொருள். மேலும்.. »

குர்ஆனின் முன் இங்கிலாந்து தூதர்!

குர்ஆனைப் போல ஒரு வேதத்தையோ அல்லது ஒரு அத்தியாயத்தையோ கொண்டுவாருங்கள் என்ற உலக சவால் கிறித்தவ குடுமபத்தைச்சார்ந்த பாதிரியார் ஒருவரின் மகனுக்கு மிகப்பெரும் சவாலாகவே இருந்தது. மேலும்.. »

குர்ஆனில் சினிமாவைபற்றி ….

ஒருமுறை (World Students Association) உலக மாணவர் கழகத்தைச் சார்ந்த மாணவர் குழு ஒன்று மௌலானா அப்துல் அலீம் ஸித்திக்கி அவர்களை பேட்டி கண்டனர். அவர்களில் ஒருமாணவர்,

குர்ஆனில் உலகிலுள்ள அனைத்தும கூறப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கூறுவது உண்மையென்றால் இக்காலத்திலுள்ள சினிமாவைப்பற்றி கூறப்பட்டிருக்கிறதா? என கிண்டலாகக் கேட்டார். மேலும்.. »