Feed on
Posts
Comments

“உள்ஹிய்யா” அல்லது “ளஹிய்யா” என்பது இறைவனின் நெருக்கத்தைப் பெறுவதற்காக துல்ஹஜ் பத்தாவது நாளிலும் அய்யாமுத்தஷ்ரீக்குடைய பிறை 11.12.13 அஆகிய நாட்களிலும் ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற கால்நடைப் பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுத்துப்பலியிடுவதற்கு இச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பிறகு “ளுஹா” முற்பகல் வேளையில் கொடுக்கப்படுவதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. மேலும்.. »

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்

இறைவன் படைத்த நாட்கள் யாவும் சிறப்புக்குரியவையாகும்.அவற்றுள் அடியார்கள் வணக்கஙகள் புரிந்து அதன்மூலம் மாண்பைப்பெற சில நாட்களை இறைவன் சிறப்பித்துள்ளான். ஏனைய சமுதாய மக்களின் வாழ்நட்களை ஒப்பிடும்போது நமது ஆயுள் மிகவும் குறைவானதாகும். மேலும்.. »

அவ்லியாவின் ஆசி பெற டிஸ்கோ நடன நிகழ்ச்சிகள்.

திருவாரூர் மாவட்டம் திட்டச்சேரி மன்சூர் அவ்லியாவின் வருடாந்தர விழாவை வெகுவிமரிசையாக நடத்துவார்கள் அந்த ஊர் அவ்லியா பக்தர்கள்.நாகூரைப் போன்று உரூஸ் நடத்த நம்மிடம் அவ்லியாக்கள் இல்லையே என்று தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட அவலியா தான் மகான் மன்சூர் அவ்லியா. அப்படி ஒரு மனிதர் அந்த ஊரில் வாழ்ந்ததாக வரலாறே இல்லையாம். இன்று இந்த அவ்லியா பெயரில் அர்ச்சனைகள்!ஆராதனைகள்! ஆடல் பாடல்கள்! அமர்க்களமாக நடைபெறுகிறது. மேலும்.. »

விண்ணுயர அவ்லியாவின் கப்ருஸ்தான்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உலகிலேயே ஒரு வித்தியாசமான கப்ருஉள்ளது. அது மேற்கூரையை முட்டும் வண்ணம் மிகஉயரமாகக் கட்டப்பட்டுள்ளது. ஏன் இந்த கப்ருமட்டும் இவ்வளவு உயரமாகக் கட்டப்பட்டுள்ளது என அதன் ஆதீன கர்;த்தாவான மக்காமு இலப்பையிடம் 1958-ம் ஆண்டு நாம் கேட்டபோது ‘இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். இது வளர்ந்துகொண்டேஇருக்கும்.வளர்ந்து வளர்ந்து விண்ணை முட்டும் போது கியாமத் நாள்-மறுமை நாள்- வந்துவிடும் என்றார்.    மேலும்.. »

அவ்லியாக்களின் திரை கிழிகிறது.
அறிவுலகம் வெட்கித் தலைகுனிகிறது.

அவ்லியாக்கள் பெயரால்
அரங்கேறும் அவதாரங்கள் !

அவ்லியாக்களின் பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும் அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம். குருட்டுத்தனமான பக்தியால் விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம் அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) என கொண்டாடி வருகிறார்கள் தெரியுமா? மேலும்.. »