November 26th, 2009 by Ahmad Baqavi
عيد مبارك
அன்பிற்கினிய நமத இணைய தள வாசகப் பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள நமது இணைய தளத்திலும் , இணைய தள வகுப்புகளிலும் கலந்து கொண்டு பயன் பெற்று வரும் உங்கள் அனைவருக்காகவும் இந்த தியாகத்திருநாளில் நம் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து துஆ செய்கிறோம். மேலும்.. »
Posted in தஃவா வகுப்பு | No Comments »
November 26th, 2009 by Ahmad Baqavi
ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும்.பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது.
மதீனாவில் திருவிழாக்கள்
பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற் காகவும்.பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள். அப்போது நபிகளார் (ஸல்) அவர்கள், மேலும்.. »
Posted in ஃபிக்ஹு, தஃவா வகுப்பு | No Comments »
November 26th, 2009 by Ahmad Baqavi
زيارة المسجد النبوي
1.மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ?
மதீனா முனவ்வராவுக்கு பயணம் செல்வோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை ஹஜ்ஜூ வணக்கங் களில் ஒன்றாகவே கருதுகின்றனர்.
மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? அல்லது அதன் ஸூன்னத்தான வணக்கங்;களைச் சார்ந்ததா? ஹஜ்ஜூக்காக வந்து மதீனாவுக்குச் செல்ல வில்லையெனில் ஹஜ்ஜூ நிறைவேறாதா? போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு எழலாம். கேட்கவும் செய்கின்றனர். மேலும்.. »
Posted in Uncategorized, ஃபிக்ஹு, தஃவா வகுப்பு, வரலாறு | No Comments »
November 24th, 2009 by Ahmad Baqavi
ஹஜ்ஜிலே கேட்கப்பட்ட சில கேள்விகள் ?
கே: இஹ்ராம் கட்டியவர் பல் தேய்க்கலாமா? பேஸ்டை பயன்படுத்தலாமா ?
பல் தேய்க்கலாம். இது நபி (ஸல்) அவர்களின் முக்கியமான சுன்னத் நடைமுறையில் உள்ளதாகும். ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் பல்துலக்கியதாக ஏராளமான நபி மொழிகள் உள்ளன.
தாரளமாக பேஸ்டை பயன்படுத்தலாம். இது இஹராமைப் பாதிக்காது. பேஸ்டைப பயனபடுத்தியவர் நன்றாக வாயைக் கொப்பளித்துக் கொள்ளவேண்டும். மேலும்.. »
Posted in ஃபிக்ஹு | No Comments »
November 24th, 2009 by Ahmad Baqavi
ஹஜ் செய்பவர் 8ஆம் நாளில்
மினாவிலே 8-வது நாள் லுஹர், அஸ்ரு, மக்ரிப்,இஷா, தொழுகைகளையும் 9-வது நாள் ஃபஜ்ருடைய தொழுகையையும் (ஆக ஐவேளைத் தொழுகைகளை) தொழவேண்டும். நான்கு ரக்அத் தொழுகைகளை கஸ்ராகத் தொழவேண்டும்.
ஒன்பதாவது நாளில்
கலையில் அரபாத் சென்று லுஹ்ரு ஆஸ்ரு தொழுகைகளை கஸ்ராகத் தொழுவிட்டு சூரியன் மறைந்ததும் அங்கு மஃரிப் தொழாமலே முஸதலிபா சென்று மஃரிப்,இஷாவை கஸ்ரு ஜம்ஆக தொழுதுவிட்டு அங்கு இரவு தங்கவேண்டும்.பஜ்ரிக்குப்பிறகு நேராக மினா செல்லவேண்டும். மேலும்.. »
Posted in Uncategorized, ஃபிக்ஹு, குர்ஆன் | No Comments »